அரிவாளுடன் சுற்றித்திரிந்த நபர்கள் ! என்ன ஏதென்று விசாரித்த செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு !
அரிவாளுடன் சுற்றித்திரிந்த மர்மநபர்கள் குறித்து விசாரித்த செய்தியாளரை அரிவாளால் வெட்டிய சம்பவம் ஆண்டிபட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி . ( மாலைமுரசு) தனியார் நாளிதழில் தேனி மாவட்ட நிருபராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று கோயில் பிரதோஷ நாளில் அவரும் அவரது மனைவியும் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று பிரதோஷ வழிபாட்டில் ஈடுபட்டு பின் கோயில் பணிகளை செய்து கொண்டிருந்தனர் .
அப்போது அந்தப் பகுதியில் கையில் அரிவாளுடன் மூன்று நபர்கள் சுற்றித்திரிந்துள்ளனர். சந்தேகம்படும் படியாக கையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த மூன்று நபர்களை அழைத்து பால்பாண்டி விசாரித்துள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அப்போது, மூன்று நபர்கள் பால்பாண்டியை ஆபாசமாக பேசி தாங்கள் வைத்திருந்த அரிவாளால் பால்பாண்டியின் இடது பக்க தலையில் பலமாக வெட்டிவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.
இதில், பலத்த காயம் அடைந்த பால்பாண்டி அருகில் இருந்தவர்களால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
மர்மநபர்கள் வெட்டியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் 20-க்கும் மேற்பட்ட தையல் போட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பால்பாண்டி கொடுத்த புகாரின் பெயரில் கண்டமனூர் போலீசார் விசாரணை செய்ததில் பால்பாண்டியை வெட்டிய போடியை சேர்ந்த கணேசன் , எரதிமக்காள் பட்டியை சேர்ந்த சின்னசாமி மற்றும் ஜி . உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டிகண்ணன் ஆகிய மூன்று பேர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
— ஜெய்ஸ்ரீராம்.