திருச்சி – காது கேட்காத குழந்தைகளுக்கு ”காக்ளியர் இன்பிளான்ட்” கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை முகாம் !
திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில் ((DEIC) OP Number 50) பிறவியில் காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தைளை கண்டறியும் முகாம் மற்றும் காக்ளியர் இன்பிளான்ட் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை முகாம் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 20.11.2024 புதன் கிழமை அன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் காது கேட்காத, பேச முடியாத குழந்தைகளை கண்டறிந்து காக்ளியர் இன்பிளான்ட் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை அளிப்பதற்கான முகாம் நடக்கிறது. குறை மாத பிரசவம், குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள், மூளை காய்ச்சல், கருவில் இருக்கும் போது கர்பிணிகளுக்கு ஏற்படும் அம்மை, தேவையில்லாத மருந்துகளை உட்கொள்ளுதல், நெருங்கிய உறவில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிறவியிலேயே குழந்தைகளுக்கு காது கேளாமை மற்றும் பேச முடியாத நிலைமை ஏற்படுகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதன் காரணமாக குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கும் என்பதால் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் காக்லியர் இம்ப்லேன்ட் எனும் சிறப்பு சிகிச்சை 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக செய்யப்படுகிறது.
இதுபோன்ற குழந்தைகளை கண்டறிந்து தேர்வு செய்து சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு முகாம் 20.11.2024 புதன் கிழமை அன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாமை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.