பாட்டாளி மக்கள் கட்சி – வெடித்த உட்கட்சி போர்! கட்சியில் பிரச்சனை இல்லை – நடப்பது என்ன? ஜி.கே. மணி

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கடந்த ஏப்ரல் 10ஆம் நாள் செய்தியாளர்களைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் இராமதாசு, “கட்சியின் நிறுவனர் பொறுப்பில் இருக்கும் நான், இனி கட்சியின் தலைவராகவும் செயல்படுவேன். தற்போதைய தலைவராக உள்ள அன்புமணி இனி செயல் தலைவராகச் செயல்படுவார்” என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு ஊடகங்களில் வெளியானவுடன் பாமக தொண்டர்கள் இந்த அதிர்ச்சி முடிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தனர். மாநிலப் பொறுப்பாளர்கள் பலரும் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று இராமதாசுவைச் சந்தித்தனர். பின்னர் அன்புமணியையும் சந்தித்தனர்.

பாமக - வெடித்த உட்கட்சி போர்
பாமக – வெடித்த உட்கட்சி போர்

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

இதற்கிடையில் பாமக பொருளாளர் திலகபாமா வெளியிட்ட அறிக்கையொன்றில்,“கட்சியின் நிறுவனர் ஐயா இராமதாசு தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கியதன் மூலம் ஜனநாயகப் படுகொலையைச் செய்துவிட்டார்” என்று கட்டாமான குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து கட்சியின் நிறுவனர் இராமதாசைச் சந்திக்கசென்ற திலகபாமாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொண்டர்களையும் மாநிலப் பொறுப்பாளர்களையும் சந்தித்த அன்புமணி,“நான் முறைபடி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். என்னுடைய தேர்வை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில் பொதுக்குழு கூட்டப்படாமல் உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் என்னை எப்படி நிறுவனர் பொறுப்பில் உள்ள ஐயா, என்னைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கமுடியும்? என்ற கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்” என்றார்.

பாமக பொருளாளர் திலகபாமா
பாமக பொருளாளர் திலகபாமா

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

பாமக பொருளாளர் திலகபாமா

பாமகவில் இந்தப் பிரச்சனை உடனே தொடங்கவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் நாள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் பட்டானுரில் நடைபெற்றது. அக் கூட்டத்தில் இராமதாசு அவர்கள் மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமன் கட்சியின் இளைஞரணி தலைவராக அறிவித்தார். “அன்புமணிக்கு உதவியாக முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்படுகிறார்” என அப்போது கூறியிருந்தார் இராமதாசு. இந்த நியமனத்தை உடனே அன்புமணி ஏற்கவில்லை. முகுந்தன் நியமனத்திற்கு உடனே எதிர்ப்பைப் பதிவு செய்தார். நிறுவனர் இராமதாசு,“என் பேச்சை கேட்வில்லை என்றால் அவர்கள் கட்சியில் நீடிக்கமுடியாது. இது அன்புமணிக்கும் பொருந்தும்” என்றார். தொடர்ந்து அன்புமணி,“பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்குத் தொண்டர்கள் என்னைச் சந்திக்கலாம்” என அறிவிப்பை வெளியிட்டு இராமதாசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். பின்னர் இருதரப்பும் அமைதியாக இருந்தனர்.

முகுந்தன் பரசுராமன்
முகுந்தன் பரசுராமன்

இந்தப் பிரச்சனை கட்சியில் நீறுபூத்த நெருப்பாகவே இருந்துவந்தது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒருவருடம் உள்ள நிலையில், கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும். இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றே தான் தலைவராக வரவிரும்புகிறேன் என்று தன் விருப்பத்தை இராமதாசு தெரிவித்தவுடன் கட்சியில் பிரச்சனை வெடிக்கத் தொடங்கியது. இராமதாசுவைக் கடுமையாக விமர்சித்த திலகபாமா பொருளாளர் பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் உடனே விலகவேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் அறிக்கை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் பொறுப்பில் நான்தான் இருக்கிறேன் என்று சொல்லும் அன்புமணி, தனக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட திலகபாமா மற்றும் திலகபாமா கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்ட வடிவேல் இராவணனையும் நேரில் அழைத்து விசாரணை செய்தார். மாமல்லபுரத்தில் மே 11ஆம் நாள் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழுநிலவு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கட்சியில் உள்ள பிரச்சனைகளை வெளியில் பகிரங்கமாக பேசவேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

டாக்டர் இராமதாசு
டாக்டர் இராமதாசு

நெருக்கடியான சூழலில், கடந்த ஏப்ரல் 13ஆம் நாள் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள வீட்டில் இராமதாசையும், சென்னை பனையூரில் உள்ள வீட்டில் அன்புமணியையும் நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். பனையூரில் அன்புமணியை முகுந்தன் பரசுராமன் சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, “ஐயா இராமதாசிடம் சொல்ல வேண்டியதை சொல்லியிருக்கிறோம், அவரும் கேட்டிருக்கிறார். ஐயா இராமதாசையும் அன்புமணியையும் மாமல்லபுரம் மாநாட்டில் ஒன்றாக பார்ப்பீர்கள். தேர்தலில் இருவரும் இணைந்து செயல்படுவார்கள். விரைவில் நல்ல செய்தி வரும்” என்று பாமகவின் கௌரவ தலைவர் ஜி.கே. மணி முழுபூசணிக்காயைச் சேற்றில் மறைத்த கதைபோன்று கூறினார்.

ஜி.கே. மணி
ஜி.கே. மணி

அண்மையில் கிடைக்கும் தகவல்கள் நம் தலையைக் கிறுகிறுக்க வைக்கின்றது. அன்புமணி பாஜகவோடு கூட்டணி வைப்பது இராமதாசுக்குப் பிடிக்கவில்லை என்றும், திமுக கூட்டணிக்கான இராமதாசு கட்சியின் கதவுகளைத் திறந்து வைத்திருப்பது அன்புமணிக்குப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. பாமகவின் சமூகநீதி, சிறுபான்மையினர் நலம், மும்மொழிக் கொள்கை போன்ற தமிழக நலன் சார்ந்த கருத்தியலுக்கு எதிராக பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

பாஜகவோடு இனியும் கூட்டணி வைத்தால் பாமக என்ற கட்சி அடியோடு அழிந்துவிடும் என்று இராமதாசு நினைக்கின்றார். தற்போது அதிமுக – பாஜக கூட்டணி உருவான நிலையில், இந்தக் கூட்டணியில் இடம் பெற்றால் அதிமுக அல்லது பாஜகவிடம் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பெற்றுக் கொள்ளலாம். மேலும் 20 சட்டமன்றத் தொகுதிகளையும் பெற்றுக் கொண்டு, மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் 15 இடங்களில் வெற்றி பெற்று விடலாம் என்பது அன்புமணியின் கருத்தாக உள்ளது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

 திமுக கூட்டணியில் உறுதியாக உள்ள விடுதலைச் சிறுத்தைகள் இருக்கும் நிலையில் இராமதாசு நினைப்பதுபோல் பாமக – திமுக கூட்டணி எப்படி ஏற்படும் என்பது புரியாத புதிராக உள்ளது. மேலும் பாமக இடம் பெற்றுள்ள கூட்டணியில் விசிக இடம் பெறாது என்பது விடுதலைச் சிறுத்தைகள் கொள்கை முடிவாக உள்ளது. ஒருவேளை பாமக திமுக கூட்டணியில் இடம்பெறாமல் டாக்டர் இராமதாசு திமுகவோடு தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்வாரா? என்ற கேள்வியும் எழுகிறது.

பாமகவில் தந்தை மகன் அதிகாரப் போர் உச்சத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றது. மாநில நிர்வாகிகள் இராமதாசு பக்கமும், தொண்டர்கள் அன்புமணி பக்கமும் உள்ளனர். பாமக யாரோடு கூட்டணி சேர போகின்றது? அன்புமணி தலைவராகத் தொடர்வாரா? என்ற கேள்விகள் அரசியல் அரங்கில் வலம் வந்துகொண்டிருக்கின்றது. மே – 11 மாமல்லபுரம் சித்திரை முழுநிலா நிகழ்வில் இப் பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படுமா? காத்திருப்போம்.

 

—  ஆதவன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.