கீழக்கரை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் காவல்துறை அத்துமீறல் ! அதிர்ச்சியில் பொதுமக்கள் !
கோவில் திருவிழாவில் காவல்துறை அத்துமீறல் ! அதிர்ச்சியில் பொதுமக்கள் !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மறவர் தெருவில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் தொடர்ச்சியாக இசைக் கச்சேரி நடைபெற்றது. இசைக்கச்சேரி நடத்துவதற்கு முறையாக காவல் துறையில் அனுமதி வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இருந்த போதும் இரவு 10 மணிக்கு அங்கே வந்த இன்ஸ்பெக்டர் சரவணன் உடனடியாக இசைக்கச்சேரி நிறுத்துங்கள் என கத்திக்கொண்டே உள்ளே சென்று மைக்கை ஆப் செய்தார்.
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவிழாவில் பங்கேற்ற வழக்கறிஞர் மாரியப்பன் கூறியதாவது பொதுமக்களிடம் வசூல் செய்து தான் இசை கச்சேரியை நடைபெறுகிறது. இசை கச்சேரிக்கு 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது காவல்துறையில் அனுமதி கேட்கும் போது அவர்கள் எங்களுக்கு டொனேஷன் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு பார்த்துக் கொள்ளலாம் என்று விழா குழுவினர் வந்துவிட்டனர்.
இந்த ஆத்திரத்தில் தான் வந்து இன்ஸ்பெக்டர் சரவணன் அங்கிருந்த பொதுமக்களிடம் ஒருமையில் பேசி உள்ளார். அப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் சூரியகலா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் மற்றும் மதிமுக அதிமுகவைச் சேர்ந்த பல்வேறு அரசியல் பிரமுகர்கள் இருந்த போதும் எதைப் பற்றியும் கவலைப்படாத இன்ஸ். விழா கமிட்டியாளர்களிடமாவது பாட்டுக் கச்சேரியை நிறுத்த சொல்லி இருக்கலாம் அதையெல்லாம் செய்யாமல் அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற மமதையில் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் நேரடியாக சென்று மைக்கை பாடி கொண்டிருக்கும்போதே மைக்கை அமத்துவது எந்த விதத்தில் நியாயம் .
அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த திருவிழாவில் தேவையில்லாமல் இவரே கலவரத்தை தூண்டும் வகையில் பொதுமக்களிடம் ஒருமையில் பேசுவது அங்கிருந்த பெண்கள் மற்றும் ஆண்கள் முதியோர்களை பிடித்து தள்ளிவிட்டு இவரே சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கொண்டு விடுகிறார். இது தேவையில்லாதது விழா கமிட்டி ஆட்களிடம் ஒரு வார்த்தை கூறியிருந்தால் அவர்களே விழாவை நிறுத்தி இருப்பார்கள். என்றார் .
மேலும் இது பற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது இப்பகுதியில் தொடர்ச்சியாக மது விற்பனை நடைபெற்று வருகிறது என அவர்களின் பெயருடன் இவரிடம் மனு அளித்து எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார் ஆனால் கோவில் திருவிழாவில் வந்து ஏன் இவ்வளவு பிரச்சனை செய்கிறார் என்பது தெரியவில்லை என்றானர்.
மேலும் இது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் கூறியதாவது இவர் கோவில் திருவிழாவில் அத்துமீறி நடந்து கொண்டதையும் அநாகரீகமாக பேசியதையும் வீடியோவுடன் தமிழக முதல்வர் அவர்களுக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளோம் இவரை கண்டித்து விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றார்.
இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு விரைவில் தமிழக முதல்வரின் பாதுகாப்பு பிரிவில் பணி ஆணை வந்ததாகவும் சொல்லப்படுகிறது. மக்களையே பாதுகாக்க தெரியாதவர் மக்களின் முதல்வரை பாதுகாப்பாரா ?
பாலாஜி