பொய்த்துப் போன பருவமும் பொங்கலோ பொங்கலும்!

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

பொய்த்துப் போன பருவமும் பொங்கலோ பொங்கலும்!

பொய்த்துப் போன பருவமும் பொங்கலோ பொங்கலும்!
பொய்த்துப் போன பருவமும் பொங்கலோ பொங்கலும்!

 

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பொங்கல் விழாவை நம் வீட்டில் மகிழ்வாய் கொண்டாடியிருப்போம்… ஆனால் தை மாதம் அறுவடை நேரத்தில் மழை பெய்து பயிரெல்லாம் தண்ணீரில் மூழ்கி வேதனையில் உள்ள ஒரு விவசாயின் வீட்டில் எப்படி பொங்கல் கொண்டாடியிருக்க முடியும் .இது இயற்கையின் வேலை என கடந்து போக முடியாது.. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல ஆயிரம் ஹெக்டேர் ஏக்கர் நெல் வயல்கள் டெல்டா மாவட்டங்களில் தண்ணீரில் மூழ்கியுள்ளது … இதற்கு காரணம் நாம் என்பதை நாம் உணர வேண்டும். ஆம் நாம் இயற்கையை விட்டு விலகிச் சென்று தேவைக்கு பொருள் வாங்காமல் ஆசைக்கு பொருள் வாங்கி குவிக்கும் பழக்கத்தால் இன்று நம்முடைய மழைக்காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும்.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

பழைய படங்களில் வரும் மருதகாசியின் பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது.
“தங்க‌ ச‌ம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்-
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம் தங்க‌ ச‌ம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
ஆடியிலே வெதை வெதைசோம் தங்கமே தங்கம்
ஐப்ப‌சியில் க‌ளை எடுத்தோம் தங்கமே தங்கம்
கார்த்திகையில் க‌திராச்சி தங்கமே தங்கம்
க‌ழ‌னியெல்லாம் பொன்னாச்சி தங்கமே தங்கம்
முத்துச‌ம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
முற்ற‌த்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
குத்து விள‌க்கேற்றி வ‌ச்சி தங்கமே தங்கம்
கொண்டாடி ம‌கிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்’

3

இப்படி பருவத்தே பயிர் செய்து பருவம் மாறாமல் பெய்கின்ற மழையால் விளைந்த நெல்லை எடுத்து பொங்கல் வைத்தோம்… ஆனால் இப்போது தை மாதம் அறுவடை நேரத்தில் மழை பெய்கிறது ..காலநிலை மாற்றத்தின் விளைவுகளையும் நாம் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்.. நம்முடைய நுகர்வு கலாச்சாரத்திற்காக அழிக்கப்பட்ட மழைக்காடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னமும் மிச்சம் இருக்கிறது… அதிலும் டீ காபி என பணப்பயிர்களை அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். தண்ணீரை உள்வாங்கும் தன்மையை நம்முடைய மலைகளும் இழந்து கொண்டு வருகிறது….

எப்படி நம்முடைய நுகர்வு கலாச்சாரம் நம்முடைய காடுகளை சீரழிக்கின்றது என்பதை கொஞ்சம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.
ஆம் பணம் கொடுத்து எதையும் வாங்க முடியாது: என் தாத்தா என் அப்பாவிடம் அழகிய புவியை ஒப்படைத்து சென்றார். அவரிடம் செல்வம் குவிந்திருந்த போதும் மண் வீட்டில்தான் வாழ்ந்தார். பெரும்பாலும், மானாவாரி உணவுவகைகளையே உண்டு வாழ்ந்தார். ஏன் குடிசையில் வாழ்கிறோம், ஏன் மானாவாரி நிலத்தில் விளைந்த உணவு வகைகளை உண்கிறோம் என்று தெரிந்து செய்தார். ஆனால், என் அப்பா படித்த கல்வி மேலைநாட்டு நாகர்ரிகம் நோக்கி ஈர்த்தது.. வானுயர்ந்த கோபுரங்கள், பெரிய கட்டமைப்புகள்தான் வளர்ச்சி என்றது. என் அப்பா அதை அரை மனதுடன் ஏற்றுக் கொண்டார். இயன்ற வரை இயற்கையை சுரண்டாமலும் இருந்தார்.

4

ஆனால், நாங்கள் வரலாற்றில் இருள் சூழ்ந்த பக்கத்திற்குள் நுழைந்தோம். வளர்ச்சி என்ற பெயரால் எங்களுக்கு எதுவெல்லாம் காட்டப்பட்டதோ, அவை அனைத்தையும் நம்பினோம். பொருள் வாங்கி குவிப்பதுதான் கௌரவம் என்று சொல்லப்பட்டது. அதனால், அனைத்தையும் வாங்கி குவித்தோம். வாழ்வதற்காக அல்லாமல் வாங்குவதற்காக உழைத்தோம். ஒருவருக்கு இரண்டு கைபேசிகள், நான்கு காலணிகள், நாற்பது சட்டை பேண்ட்கள் என வாங்கி குவித்தோம்.

ஒரு நாள் நாங்கள் வாங்கி குவித்த பொருட்கள்தான், இந்த புவிக்காக எமன் என்று புரிந்தது. எந்த அறிவியல் எங்களை அதிகம் நுகர சொல்லி தூண்டியதோ, அதே அறிவியல் இப்போது சொல்கிறது, ஒரு ஜீன்ஸ் தயாரிக்க ஒன்பதாயிரம் லிட்டர் நீர் தேவை என்றும், ஒரு ஜோடி காலணி தயாரிக்க இருபதாயிரம் லிட்டர் நீர் தேவை என்றும்.

ஆனால், இது எங்களுக்கு தெரிய வந்த போது நிலைமை படு மோசமாகிவிட்டது. ஒரு சொட்டு தண்ணீருக்காக அங்கொன்றும், இங்கொன்றுமாக சாவுகள் விழத் துவங்கிவிட்டது. சொல்லப்போனால், எம் தலைமுறைக்கே இயற்கையான தண்ணீரின் சுவை எப்படி இருக்கும் என்றே தெரியாது. எங்கள் டி. என். ஏவில் படிந்து இருப்பதெல்லாம் செயற்கை நீரின் சுவை மட்டுமே. பாட்டில் நீரின் சுவை அது.
எம் அடுத்த தலைமுறைக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.. இயற்கை நிச்சயம் மிக கருணையுடையது. நாங்கள் செய்த தவறுக்காக உங்களை தண்டிக்காது என்று நம்புகிறேன். தண்டித்து விடக் கூடாது என்று விரும்புகிறேன்.உங்களுக்கு விட்டு செல்ல எங்களிடம் எதுவும் இல்லை, நல்ல அனுபவம் உட்பட.

-ஆற்றல்.பிரவீண் குமார்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.