வீடியோவில் தலைமறைவான பிரணவ் ஜுவல்லரி மோசடி மதன் – கதறும் ஏமாற்றப்பட்ட மக்கள் !

0

வீடியோவில் தலைமறைவான பிரணவ் ஜுவல்லரி மோசடி மதன் – கதறும் ஏமாற்றப்பட்ட மக்கள் !

திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரணவ் ஜுவல்லரி என்ற நகைக் கடை தமிழகம் முழுவதும்  9 முக்கிய நகரங்களில் கிளைகளை உருவாக்கி கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் டெபாசிட்டுகளுக்குகூடுதல் வட்டி தருவதாகவும் ரூ 5 லட்சம் செலுத்தினால் 24% வட்டியாக மாதம் ரூ. 10,000 தருவதாகவும் பழைய நகைகளை டெபாசிட் செய்தால் ஒரு ஆண்டிற்கு பிறகு சேதாரம் செய்கூலி இல்லாமல் புதிய நகை தருவதாகவும் தினம் ரூ 150 நகைசீட்டு கட்டினால் ஆண்டு இறுதியில் 1 பவுன் (8 கிராம்) தங்கம் தருவதாகவும் கடைஊழியர்களை வைத்து சாதாரண ஆட்டோ தொழிலாளர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் என ஏழை மக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறிவசூல் செய்தது.

இதனை உண்மை என நம்பி கட்டிய பணம், நகைகளை திருப்பித் தராமல் மேற்கண்ட கடைகளை இழுத்து மூடியுள்ளார்கள். தமிழகம் முழுவதும் இது போன்று 10,000 க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ரூபாய் 100 கோடிக்கும் மேல் இது போல் மோசடி செய்திருக்கிறார்கள். பணத்தை இழந்த பொதுமக்கள் செய்வதறியாது திண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

பிரணவ் ஜுவல்லரி மதன் தன் மனைவி கிருத்திகாவுடன் திருச்சியில் இருந்து தப்பி சேலம் வரை சென்று அங்கு  பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கி அந்த காரில் தான் தலைமறைவாக ஊர் சுற்றி கொண்டு இருக்கிறார் என்கிறார்கள். திடீரென ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் சரண்டர் ஆக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். பிரணவ் ஜுவல்லரி ஆரம்பித்த அதன் மூலம் கொட்டிய பணத்தின் மூலம் திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டின் உள்ள கலைஞர் அறிவாலயம் அருகே 3,780 சதுர அடி நிலத்தை வாங்கி இருக்கிறார். இந்த இடத்தில் தான் பிரமாண்டமாக பிரணவ் ஜுவல்லரி கட்ட திட்டம் போட்டிருந்தார். அந்த இடம் தற்போது சதுர அடி 20,000 ரூபாய் வரை விற்கிறது என்கிறார்கள்… 

Pranav Jewelery
Pranav Jewelery
- Advertisement -

- Advertisement -

இதற்கு இடையில் பிரணவ் ஜுவல்லரி மதன் அவருடைய யூடியூப் சேனலில்  நான் கொடுக்க வேண்டிய தொகை 32 கோடி மட்டுமே, அதை ஒரு சில மாதங்களில் கொடுத்து விடுவேன், அது குறித்து நானே போலீசாரிடம் பேசியிருக்கிறேன்… என்னிடம் சொத்து நிறைய இருக்கிறது, அதை விற்று உங்களுக்கு செட்டில் செய்கிறேன், என்று  வீடியோவாக பேசினார். அந்த வீடியோவிற்கு கீழே பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் கொந்தளிப்பை பதிவு செய்து வருகிறார்கள்.. அந்த பதிவுகளை சிலவற்றை தொகுத்து கொடுக்கிறோம்..

@meghamiraculin7230

உங்க கடையை நம்பிதான் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளோம். இது இப்போது வேண்டுமானால் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் நம் சந்ததி வாழவேண்டும் சார். விரைந்து எல்லோருக்கும் பணத்தை தருவதற்கு முயற்சி எடுங்கள்.

@vijayana2895

நான் ஈரோடு பகுதியினை சார்ந்த வாடிக்கையாளர்,நீங்கள் கடையை எந்தவொரு தகவலும் இல்லாமல் மூடியது மிக்க பெரிய தவறு, கடையில் சில மாதங்களாக எந்தவொரு நகையும் இல்லை, அப்போதே எனக்கு சந்தேகம் வந்து கேட்டபோது… சரியான பதில் இல்லை.. கேட்ட அடுத்த நாள் கடை திறக்க வில்லை.. இது மிக பெரிய நம்பிக்கை மோசடி.. உங்கள் விளக்கம் எங்களுக்கு தேவை இல்லை…எங்கள் பணத்தை கொடுங்கள்…. ஐயா ஏமாற்ற நீங்கள் நினைக்க வேண்டாம்… அது தங்காது…

@SNR2202

சொல்லாமல் கொள்ளாமல் கடையை மூடிவிட்டு கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லலாமா.. இது தற்காலிக தப்பித்தல்

Pranav Jewelery
Pranav Jewelery

@ArunKumar-ur3pz

நீங்கள் கூறுவது உண்மை யாக இருந்தால்… ஏன் இப்படி உங்கள் அறையில் இருந்து வீடியோ எடுத்து பதிவிடுகிறீர்கள்? ஏதேனும் ஒரு காவல் நிலையத்தில் மீடியா முன் ஒரு வாக்கு மூலம் கொடுக்கலாமே… பிரச்சனை பெரிதாகி கொண்டு அல்லவா போகிறது….

@spirit_and_opportunity

Sir plz, open the shop, மக்கள் உங்களை நம்பி தான் பணத்தை கொடுத்து இருக்காங்க, எல்லாருக்கும் பணத்தை return கொடுங்க….

@harishlal100

மதிப்பிற்குரிய ஐயா,தாங்கள் இக்காணொளியை பதிவேற்றியதற்கு நன்றி.அக்டோபர் 8ம் தேதி அன்று மதுரை கிளையின் மேலாளர், நான் முதலீட்டு செய்த பணத்திற்கு நகையை அக்டோபர் 19 அன்று தருவதாக ஒப்புகை பதிவு சீட்டு வழங்கினார்.ஆனால் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி கடையை மூடியதால் என்னை போன்ற வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது. காணொளியில்  கூறியபடி எங்கள் முதலிட்டை ரொக்கமாக அல்லது பணத்தை இணைய வழி மூலமாகவோ பரிவர்த்தனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

@nivedhaperumal3654

Please dont cheat our valuable trust and money😢

Please open the shop give our matured amount

@saravanakkumarsk6517

Thank you sir, I am your customer from opening in Madurai Branch. We are all waiting for the deewali festival as soon as return back money at least my savings value Rs.110000 by cheque or RTGS. I know Your honesty in business, but it is the worst situation for You.we all and customers pray 🙏 for you to recover from this bad situation, again remember to settle before the festival sir.

@g.s.prasanthkumar3386

4 bismi svs

Sir, please, i have no sleep for 3 Days. Due to my health condition very bad situation. Please help us and open the shop give our meatured amount or jewelry

@dhiyangovi8891

This ideat has cheated me with a worst finishing gold 3months after chit is closed..I am okay atleast we got the worst finishing gold, but I am feeling so bad for others who have not received any..

@muthu_gs5002

It’s a biggest scam,cheating poor people savings??? Giving statement in a single room after close all the shop without a stock, preplanned attempt, at least please give money to every customer who invested with your shop name

@arokiajeyaraj9752

Sir. என் பொண்ணுக்கா chit pootu chit finish akiruchu Nagaiya pooja festival edukkanum sir. Shop open பண்ணுங்க sir

@priyavenseslaus3418

Unga shop jewel vangi money. Save aagiruku Sir… Shop close pannama direct ah customer kita pesiga Sir ….shop  close pannadhu tha nega emathura mathari iruku . please kindly request Sir shop reopen pannuga customer naga support panna ready  Sir..

@shanthiniananthraja5339

Oru sila month ah?? Bond over aagi 6months aachu man.. ipdilam pesuna nanga nambirvom nu nenikringa nenga emathnadu podhum ellarum emandadum podhum media munnadi vanga first.. makkal kaasa kudthu road la nikranga enga kaasa vangitu nenga ac room cool ah nyt 12 ku video upload podvingalo.. ana onnu ivlo per vaitherichala sathyama un family nala itkathu. Aandavanku munnadi nenga odavum mudyathu oliyavum mudyathu nala terinjikonga sir

@ranim9762

உங்களை உங்களை நம்பி தானே பணம் போட்டோ உங்கள் சந்ததி நல்லா இருக்கணும்னா உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருந்தால் உடனே கொடுங்கள் கொடுங்கள் கொடுங்கள்.

@prakazshpk

இப்ப ஏன் தரலனு கேட்டா??.கொஞ்ச நாள்ல தந்துடுவாராம்.😆😆நல்ல பதில்.  0%சேதாரம்ம்ம்ம்!!😆😆கல்யாணத்துக்கு நகைய குடுன்னா…_லவுக்கு நகைய குடுத்துடுவேனு சொல்றாரு..

@lakshminarayan6727

This Gentleman Madan  has NO Legal rights to invest in Real Estate. Let all customers who got cheated file a Joint Suit at National Consumer Forum Delhi for a few hundred crores. Claim compensation + Interes+ Mental harassment compensation. Get the order passed. Attach all  his Real estate property  . This is the only solution

@lakmipradeep3913

I’m in pondicherry ,  u break our trust, every one believe u but u break it

10 months complete my scheme then 3 month waiting for my order

Now shop closed  God only give the punishment

@sathyam5496

Please….. Nanga kattuna amount mattum return kuduthurunga sir…… Nan night duty paaathu seththu vacha panam…ennoda 2varuda ulaippu…. Yemathurathinga sir……… Mana ulachalaye sethuruven pola 3days ah…… Veliya sollika mudiyadha rana valila iruken sir……

@geethanagarajan9017

சின்ன சின்ன குழந்தைக்காக சேர்ந்த பணம்.. தயவுசெய்து மீண்டும் கடைகள் திறந்து பணத்தை கொடுங்க சார்..

 

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.