திருப்பத்தூர் அருகே  தனியார் பேருந்து கவிழ்ந்து டிக்கெட் பரிசோதகர் பலி!

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருப்பத்தூர் அருகே  தனியார் பேருந்து கவிழ்ந்து டிக்கெட் பரிசோதகர் பலி!

மதுரையில் இருந்து காரைக்குடி நோக்கி சுமார் 40 பயணிகளுடன் தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்து சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே வரும் போது, இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பேருந்தை திருப்பியுள்ளார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பேருந்தின் இடுப்பாடுகளிடையே சிக்கி டிக்கெட் பரிசோதகர் சிவா என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவம் இடம் வந்த குன்றக்குடி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு, காரைக்குடி தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-பாலாஜி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.