குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் செயலிகள்

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

நாசா விசுவலைசேஷன் எக்ஸ்ப்ளோரர்

(NASA VISUALISATION EXPLORER)

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

அனிமேஷன் காணொளிகளுடன் கொடுக்கப்பட்டிருக்கும் நாசாவின் இந்த விசுவலைசேஷன் எக்ஸ்ப்ளோரர் செயலியில் பூமியில் நிகழும் மாற்றங்கள், பால்வெளியில் நடக்கும் செயல்பாடுகள் என அனைத்து தகவல்களும் கிடைக்கும். பூமியில் மாறும் வெப்பநிலைகளால் எப்படி மாற்றம் நிகழ்கிறது, சூரியனுக்கு அருகில் செல்லும் செயற்கைக்கோள் எப்படி பாதிப்பு இல்லாமல் தகவல்களை சேகரிக்கிறது போன்ற தகவல்களை அளிக்கிறது இந்தச் செயலி.

ஹவ் டு மேக் ஓரிகாமி

3

(HOW TO MAKE ORIGAMI)

காகிதத்தில் பொம்மை செய்யும் கலைக்கு ‘ஓரிகாமி’ எனப் பெயர். இந்த செயலியின் சிறப்பம்சம் குழந்தைகள் தாங்கள் விளையாடும் பொம்மைகளை தாங்களே காகிதத்தில் செய்து கொள்ளலாம் என்பது தான். இது மனதுக்கும் ஒருவிதமான புத்துணர்ச்சியை அளிக்கும். பொம்மைகளை எப்படி செய்ய வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியாது தான். அதற்காகவே இருக்கிறது இந்த ஹவ் டு மேக் ஓரிகாமி செயலி.

4

யூடியூப்கிட்ஸ்

(YOUTUBE KIDS)

பேரன்டல் கன்ட்ரோல் கொண்ட தே இந்த யூடியூப்கிட்ஸ் செயலி. இந்தச் செயலியின் சிறப்பம்சம் என்னவென்றால், குழந்தைகள் எதைப் பார்க்கலாம், எவ்வளவு நேரம் பார்க்கலாம் என்பதை இதில் தீர்மானிக்க முடியும். குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னும் குழந்தைகள் காணொளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் செயலி தானாகவே லாக் ஆகிவிடும்.

கான் அகாடமிகிட்ஸ்

(KHAN ACADEMY KIDS)

குழந்தைகளுக்கான செயலியே கான்அகாடமிகிட்ஸ். இந்த செயலியைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் எதுவும் தேவையில்லை. எண்கள் மற்றும் எழுத்துகள் கற்றுக் கொள்வது, குழந்தைகளுக்கான அடிப்படைக் கணிதம், ஆங்கில இலக்கியம் போன்றவற்றுக்கான காணொளிகளும் இடம் பிடித்துள்ளன. புத்தக வடிவிலும் தகவல்கள் இருக்கிறது. இது தவிர இயற்கை, விலங்குகள் போன்ற பள்ளிக்கல்வியை தாண்டி குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களும் ஏராளமாக இருக்கின்றன.

டைனிகார்ட்ஸ்

(TINY CARDS)

புதிய மொழிகளைக் குழந்தைகள் கற்றுக் கொள்வதற்கான செயலியே டைனிகார்ட்ஸ். இதில் தகவல்கள் அனைத்தும் கார்டு வடிவில் இருக்கும். குழந்தைகள் திரையைப் பார்த்துக் கொண்டு மட்டுமே இல்லாமல், ஒவ்வொரு தகவலுக்கு இடையிலும் கேள்விகளை, எப்படி உச்சரிப்பது மற்றும் மீண்டும் உச்சரித்துக் காட்டுதல் என புதுமையான கற்றல்முறை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமிற்கு அடிமையாவதை தடுக்கும் ‘டெய்லிலிமிட்’

உலகஅளவில்மிகவும்பிரபலமானசமூகவலைதளங்களில்ஒன்றாகஇன்ஸ்டாகிராம் செயலி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. அதிகளவிலான பயனர்களை ஈர்த்திருக்கும் இந்த செயலிக்கு ஏராளமானோர் அடிமையாகி அத்தளத்தில் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 2018-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் பயனர்கள் செலவிடும் நேரத்தை கணக்கிட்டு கட்டுப்படுத்துவதற்காக ‘டெய்லிலிமிட்’ என்ற அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. இதில் சென்று பயனர்கள் தங்களுக்கான செலவிடும் நேரத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அந்த நேரத்தை பயனர்கள் எட்டியவுடன் தானாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். குறைந்தது 10 நிமிடத்தில் இருந்து இந்த ‘டெய்லிலிமிட்’ நேரத்தை தேர்வு செய்யலாம் என்று இருந்த நிலையில், தற்போது குறைந்தபட்ச நேரம் 30 நிமிடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இனி இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களுக்கான டெய்லிலிமிட் நேரத்தை 30 நிமிடங்கள், 45 நிமிடங்கள், ஒருமணிநேரம், 2 மணிநேரம், 3 மணி நேரம் என வைத்துக் கொள்ளலாம்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.