அது என்ன ஃபேன்டசி செக்ஸ்?

0

ஆணோ, பெண்ணோ தனது துணையுடன் பாலுறவு கொள்ளும்போது வேறொருவரையோ, வேறொரு சூழலையையோ கற்பனை செய்து கொள்வதே ‘ஃபேன்டசி செக்ஸ்’ என்கிறார்கள். பாலுறவில் திருப்தி ஏற்படாதவர்கள் மட்டுமே ‘ஃபேன்டசி செக்ஸ்’ மூலம் தங்களை திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். அதாவது தன்னுடைய உறவுக்கு தூண்டுதலாக ஒரு விஷயம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதை கற்பனையாக மனதில் நினைத்து பாலுறவில் ஈடுபடுவது பேன்டசி செக்ஸ்.

பாலியல் கற்பனை என்பது 100 க்கு 90 சதவீதம் பேருக்கு ஏற்படுவதுண்டு என ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். அது தவறல்ல என்றும் பலரும் இது குறித்து வெளியில் பேசாததால் இது ஒரு ரகசிய சிந்தனையாகவே கருதப்படுகிறது.

துணையுடன் கொள்ளும் செக்ஸ் உறவில் திருப்தி கொள்வதற்கு இந்த பாலியல் கற்பனை பேர் உதவியாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். உலக அளவில் ‘பேன்டசி செக்ஸ்’ தவறாக கருதப்படுவதில்லை. மகிழ்ச்சியான பாலுறவுக்கு ‘பேன்டசி செக்ஸ்’ கூடுதல் திருப்தியை கொடுக்கிறது என்பதே உண்மை என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

செக்ஸில் ஆர்வம் குறைவாக இருக்கும் தம்பதிகளிடையே சிலருக்கு போர்னோகிராபி படங்களை பார்க்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக் கின்றனர். இது தவறல்ல என்னும் போது இந்த ஃபேன்டஸி செக்ஸீம் தவறில்லை என்கிறார்கள்.

போர்னோகிராபி என்பது நாம் நேரிடையாக பார்க்கும் காட்சிகள் மூலமாக உணர்வுகளை தூண்டுகிறது. பேண்டசி செக்ஸ் நம் சிந்தனையின் வழியே ரசிக்கும் ஆசைகளை வைத்து உணர்வுகளை தூண்டுகிறது. உணர்வு ரீதியாக தம்பதிக்குள் ஆழமான உணர்வுகளை இந்த பேன்டசி செக்ஸ் தூண்டுகிறது, முறையான பாலுறவில் பேன்டசி செக்ஸ் அவர்களுக்குள் நெருக்கத்தை அதிகரிக்கிறது எனக் கூறுகின்றனர்.

துணையின் மீது ஆர்வமின்மை, பாலுறவில் நாட்டமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு பேன்டசி செக்ஸ் தீர்வாக அமைகிறது. ஆண் உறுப்புகள் மற்றும் பெண் உறுப்பில் சில கருவிகளை வைத்து, அவர்களுடைய பேன்டசி சிந்தனையை தூண்டினால் உணர்வுகள் அதிகரிக்கிறது என்பதை பல ஆய்வுகளில் கண்டறிந்திருக்கிறார்கள். அத்துடன் பாலுறவுக்காக வேறு ஒரு உறவை நாடுவதும் இதன் மூலம் தடுக்கப்படுகிறது.

பேன்டசி செக்ஸ் மூலம் உணர்வுகள் அதிகமாக தூண்டப்படுவதால் பல தம்பதிகளுக்கு இடையே திருப்திகரமான பாலுறவு ஏற்படுகிறது. கணவன் – மனைவி இடையே பரஸ்பரம் பேன்டசி செக்ஸ் குறித்து விவாதிக்க வேண்டும். தம்பதிகள் தங்களுடைய உறவை ஆழப்படுத்த பல்வேறு வழிகளில் ஒன்றாக பேன்டசி செக்ஸ் விளங்குகிறது.

அறிவியல் ரீதியாக பார்த்தால் இதில் தவறு இல்லை. இதில் குற்ற உணர்வுக்கு இடம் இல்லை என்பதோடு பேன்டசி செக்ஸினால் ரத்த அழுத்தம், சர்க்கரை அதிகரிப்பு போன்றவையும் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.