உக்ரைன் Vs ரஷ்யா போர்

ஆதவன்

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

உலகப் போர் மூளுமா?

 

1942க்குப் பிறகு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கிழக்கு ஐரோப்பாவில் பல நாடுகளில் கம்யூனிச அரசுகளை ரஷ்யா அமைத்தது. கம்யூனிஸம் என்றால் வேப்பங்காயாக கசக்கும் அமெரிக்கா இதனால் மிரண்டுபோனது. 1949-இல் வடஅட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் என்ற கூட்டமைப்பை உருவாக்கியது. ‘நேட்டோ’ ((NORTH ATLANTIC TRENDY ORGANISATION-NATO) என சுருக்கமாக அழைக்கப்படும். இதில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற 12 நாடுகள் இணைந்தன. நேட்டோ கூட்டமைப்பில் இருக்கும் எந்த ஒரு நாட்டின் மீது அந்நியப் படையெடுப்பு நிகழ்ந்தாலும், மற்ற நாடுகள் படைகளை அனுப்பி உதவி செய்யும். நேட்டோ கூட்டணிக்குப் போட்டியாக ‘வார்சா ஒப்பந்த நாடுகள்’ என்ற கூட்டமைப்பை ரஷ்யா உருவாக்கியது. 1991ல் சோவியத் யூனியன் சிதறுண்டது. இதனால் சோவியத் ரஷ்ய ஒன்றியத்­திலிருந்த பல நாடுகள் பிரிந்தன. இதன் பின்னர் வார்சா ஒப்பந்த நாடுகள் என்னும் கூட்டமைப்பு செயலற்றுப் போனது என்பது கடந்தகால வரலாறு.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இதனைத் தொடர்ந்து நேட்டோ வலுவடைந்தது. சோவியத் யூனியனில் உடைந்து பிரிந்த பல நாடுகளை நேட்டோவில் அமெரிக்கா இணைத்துக்கொண்டது. 1997-க்குப் பிறகு இப்படி பல நாடுகள் சேர ஆரம்பித்தன. இப்போது நேட்டோவில் 30 நாடுகள் உள்ளன. ரஷ்யாவின் அண்டை நாடுகளான எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகியவையும் நேட்டோவில் இணைந்தன. உக்ரைனும் ஜார்ஜியாவும் நேட்டோவில் சேர விரும்பின. இணைந்தால், ரஷ்யாவைச் சுற்றி இருக்கும் எல்லா நாடுகளிலும் அமெரிக்காவின் இராணுவம் நிலைநிறுத்தப்படும். இதனால் ரஷ்யா கோபம் கொண்டது. உக்ரைன் தனி நாடாக இருந்தாலும், ரஷ்யர்களுடன் இன மற்றும் பண்பாட்டு ரீதியாக உக்ரைன் மக்கள் ஒன்றுபட்டவர்கள். 1991க்குப் பிறகு உக்ரைனில் ரஷ்ய சார்பு அரசே இருந்தது. 2014-ம் ஆண்டு மக்கள் போராட்டம் நடத்தி அந்த அரசை வீழ்த்தினர். இதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக எண்ணினார் ரஷ்ய அதிபர் புதின். இதைத் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அந்தப் போரில் 14 ஆயிரம் பேர் இறந்தார்கள். உக்ரைன் நாட்டின் தென்பகுதியில் இருந்த கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா தன்வசப்படுத்திக் கொண்டு அதை தனிநாடாக ரஷ்யா அறிவித்தது.. ‘அங்கிருக்கும் மக்கள் விடுதலை கோரினார்கள்’ என்று சப்பைக்கட்டு கட்டினார் புதின்.

நீங்கள் வேலை பெறுவது எளிது...

ரஷ்யாவின் ஆபத்திலிருந்து  தப்பிக்க நேட்டோவில் இணைவதுதான் ஒரே வழி என்று தீர்மானித்தார் உக்ரைன் அதிபர் விளா­திமிர் ஜெலன்ஸ்கி. அதற்கான முயற்சியில் இறங்கிய போது கோபத்தின் உச்சத்திற்குச் சென்றார் புதின். உக்ரைனின் கிழக்குப் பக்கம் ரஷ்ய எல்லை. அங்கே ஒரு லட்சம் ரஷ்யப் படையினர் குவிந்தார்கள். தெற்கில் கிரீமியா பகுதியிலும் கருங்கடலிலும் படைகளும் போர்க்கப்பல்களும் அணிவகுத்தன. உக்ரைனுக்கு வடக்கே இருப்பது பெலாரஸ். அது ரஷ்யாவின் நேச நாடு. அங்கு 30 ஆயிரம் படையினரையும் போர் விமானங்களையும் அனுப்பினார் புதின்.

3

ஒரே ஓர் உத்தரவு போட்டால் மூன்று திசைகளிலும் தாக்குதல் தொடங்கும். ரஷ்ய எல்லையிலேயே இருக்கும் உக்ரைன் தலைநகர் கீவ், சில மணி நேரங்களில் வீழும். ஒரு போர் நடந்தால் 50 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழக்கலாம் என்ற நிலையில் தற்போது உக்ரைன் Vs ரஷ்யா போர் தொடங்கி விட்டது. போரில் உக்ரைனின் கிழக்குப் பகுதியைப் பிடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனால், ரஷ்யாவின் 8 விமானங்கள் 5 ஹெலிகாப்டர்கள் வீழ்த்தப்பட்டன. 800 ரஷ்ய இராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது. இருநாள் போரையும் உலக நாடுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்று உக்ரைன் அதிபர் தொலைக்காட்சியில் தெரி­வித்துள்ளார்.

‘உக்ரைனைத் தாக்கினால் சும்மா இருக்க மாட்டோம்’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார். உக்ரைன் இன்னமும் முறைப்படி நேட்டோவில் இணையவில்லை என்பதால், அந்த நாட்டுக்குப் படைகளை அனுப்பமுடியாது. அதனால், நேட்டோ உறுப்பினர்களாக இருக்கும் அண்டை நாடுகளில், உக்ரைன் ஆதரவுப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

4

நேட்டோவில் உக்ரைன் சேர்க்கப்படக்கூடாது என்பதில் புதின் உறுதியாக உள்ளார். ரஷ்யாவுக்கு ஆபத்து ஏற்படுத்தும் எந்த பகுதியிலும் அமெரிக்கப் படைகள் இருக்கக்கூடாது என்றும் புதின் சொல்கிறார். உக்ரைனை மிரட்டுவதன் மூலம் இதையெல்லாம் சாதித்துக்கொள்ளலாம் என்று அவர் நினைக்கிறார். உக்ரைனை ரஷ்யா தாக்கினால், அதை அடக்கி வைக்க தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நினைக்கிறார்.

“நேட்டோவில் உக்ரைன் சேரலாமா, வேண்டாமா என்பதை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ரஷ்யாவுக்கு இதில் கருத்து சொல்ல எந்த உரிமையும் இல்லை” என்று நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலன்பர்க் சொல்கிறார். ஆனால், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், “ரஷ்யாவின் பாதுகாப்பு குறித்து புதின் சொல்வதை மதிக்க வேண்டும்” என்கிறார். ஜெர்மனி அதிபர் ஒல்ஃப் ஷோல்ஸ், “உக்ரைனை நேட்டோவில் சேர்ப்பது குறித்து இப்போது எந்தப் பேச்சும் இல்லை” என்கிறார்.

ஒருவேளை ஏதேனும் விபரீதம் நிகழ்ந்தால், அநேகமாக ஐரோப்பாவின் அனைத்து நாடுகளுமே போர்க்களத்தில் எதிரும் புதிருமாக நிற்கும் நிலை ஏற்படும். இதனால் மூன்றாவது உலகப் போர் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது என்று வெளியுறவுத் துறையில் ஆழங்கால்பட்டவர்கள் கருத்து தெரி­வித்துள்ளனர். இப்போது நடந்து கொண்டிருக்கும் போரினால் இந்திய பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை பீப்பாய்க்கு 190 டாலர் உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.500/- தாண்டும் என்று கருத்தும் உள்ளது.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.