மணிப்பூர் பிரச்சனையை மடைமாற்றும் நோக்கோடு தமிழகத்தில் என்ஐஏ சோதனை : பேரா.ஜவாஹிருல்லா கண்டனம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மணிப்பூர் பிரச்சனையை
மடைமாற்றும் நோக்கோடு
தமிழகத்தில் என்ஐஏ சோதனை :

பேரா.ஜவாஹிருல்லா கண்டனம்

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கொலை வழக்கு தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் இன்று காலை என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பதற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

நாட்டில் மணிப்பூர் பிரச்சினை பற்றி எரிந்து கொண்டிருக்கிற சூழ்நிலையில் அதை மடைமாற்றும் நோக்கோடு இச் சோதனை நடத்தப்படுவதாகவே கருத வேண்டியிருக்கிறது.

தமிழகத்தில் திமுக அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் அமைச்சர் பெருமக்களை அமலாக்கத்துறை மூலம் அச்சுறுத்தி வரும் ஒன்றிய பாஜக அரசு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் தலைவர்களைத் தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) எனப்படும் ஒன்றிய புலனாய்வு அமைப்பு மூலம் அச்சுறுத்தி வருகிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நாடு முழுவதும் பல்வேறு தீவிரவாத கொடுஞ் செயல்களில் ஈடுபட்டு வரும் சங் பரிவார அமைப்புகளைக் கண்டும் காணாமலும் இருந்துவரும் என்ஐஏ ஜனநாயக ரீதியில் செயல்பட்டு வரும் முஸ்லிம் அமைப்புகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

முஸ்லிம் சமூக, அரசியல் இயக்கங்களின் தலைவர்களை அச்சுறுத்தும் போக்கை என்ஐஏ கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் நடக்கும் கொலை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைத் தமிழ்நாட்டு காவல்துறையே கையாள வேண்டும்.


அதிமுக-பாஜக கூட்டணி முதல்வாரன எடப்பாடி ஆட்சிக் காலத்தில் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்குகளை நம் மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

சிபிஐ விசாரணை நடத்த அளிக்கப்பட்ட முன் அனுமதியைத் திரும்பப் பெற்றுக்கொண்டது போல் தமிழ்நாட்டில் மாநில அரசின் முன் அனுமதி பெறாமல் என்ஐஏ சோதனை செய்யலாம் என்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

தமிழகம் அமைதிப் பூங்காவாகச் செயல்பட்டு வரும் நிலையில் தேவையற்ற பதற்றத்தை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் இச் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

நெல்லை முபாரக் வீட்டில் என்ஐஏ அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனை கடும் கண்டனத்துக்குரியது என அந்த அறிக்கையில் பேரா.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.