தஞ்சை மாவட்டத்தில் 9 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை

0

தஞ்சை மாவட்டத்தில்
9 இடங்களில்
NIA அதிகாரிகள் சோதனை

NIA எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் தஞ்சை மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே NIA அதிகாரிகள் 13 நபர்களைக் கைது செய்து, தலைமறைவாக உள்ள மேலும் ஐந்து நபர்களைத் தேடி வருகின்றனர்.

4 bismi svs

இது தொடர்பாக ஏற்கெனவே பலமுறை சோதனை மேற்கொண்ட நிலையில், இன்று தஞ்சாவூர், கும்பகோணம், திருபுவனம், ராஜகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் NIA அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

தஞ்சை நடராஜபுரம் தெற்கு காலனியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த பக்ருதீன், கும்பகோணத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத், ராஜகிரி பகுதியைச் சேர்ந்த முகமது பாரூக், திருபுவனம் பகுதியைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா ஆகியோரின் வீடுகளில் காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.


இச் சோதனையில் NIA டிஎஸ்பி தலைமையில் இருபதுக்கு மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.