சிவில் நீதிபதி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் : பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சிவில் நீதிபதி தேர்வை
ஒத்தி வைக்க வேண்டும் :
பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!

அரசு சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ள சிவில் நீதிபதி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் விண்ணபிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக உரிமையியல் நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி பதவிக்கு TNPSC வாயிலாக 2018ல் 222 பேரும், 2019ல் 56 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். அதற்குப் பிறகு நான்கு ஆண்டுகளாக இத் தேர்வு நடத்தப்படவில்லை.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்


தற்போது சிவில் நீதிபதி பதவிக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்ப பதிவு ஜுன் ஒன்றாம் தேதி துவங்கியது. ஜுன் 30க்குள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

முதல்கட்ட தேர்வு ஆகஸ்ட் 18ம் தேதியும்இ மெயின் தேர்வு அக்டோபர் 28இ29 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.

இதில் மொத்தம் 245 பணியிடங்கள் நிரப்பிட உள்ளதாகத் தெரிகிறது.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

அரசின் சட்டக் கல்லூரிகளில் பயின்றுவரும் மாணவ, மாணவிகள் தற்போதுதான் தேர்வுகளை எழுதி முடித்துவிட்டு மதிப்பெண் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தற்போது தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பயின்று தேர்வுகளை எழுதியுள்ள மாணவர்கள் இத் தேர்வை எழுத முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

அதேவேளையில் தனியார் சட்டக் கல்லூரிகளில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் அங்குப் பயின்றோர் சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர்.

இதனால் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகம் உள்ளிட்ட அரசுக் கல்வி நிறுவனங்களில் படித்தவர்களுக்கு அந்த வாய்ப்பு பறிபோகும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.


தனியார் சட்டக் கல்லூரிகளில் படித்தவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழத்தில் படித்தவர்களுக்கு மறுக்கப்படுவது சமூக நீதிக்கு எதிரானது.

இதனைக் கருத்தில் கொண்டு TNPSC சிவில் நீதிபதி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் விண்ணபிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என்றும் பேராசிரியர் ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.