இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா, திருச்சி மா.செ.?
இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா, மா.செ.?
தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக … என்று சொல்லும் அளவுக்கு திருச்சியில் சிறப்பான சம்பவத்தை நிகழ்த்தி அசத்தியிருக்கிறார், அதிமுகவின் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் டி.என். சிவக்குமார்
பொதுவில், நமது வீட்டு திருமண நிகழ்ச்சி என்றால் நமக்குத் தெரிந்த நமது உறவுக்காரர்கள் அனைவருக்கும் நேரில் பத்திரிகை கொடுத்து அழைப்பது வழக்கம். அதுவும் நெருங்கிய மாமன் முறை உறவினர்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து முறை தவறாமல் கொடுக்க வேண்டும். தொழில் நிமித்தமாக, தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கேகூட நேரில் சென்று பத்திரிகை கொடுக்க முடியாத இக்கட்டை எதிர்கொண்டு வருகிறார்கள். இதனை சரிசெய்ய வாட்சப்பில் அழைப்பிதழை அனுப்பிவிட்டு, தொலைபேசியில் தகவல் சொல்வது புதிய நடைமுறையாக இருந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக, அரசியல்வாதியாக இருப்பவர்களுக்கு இல்ல விஷேசங்களுக்கு பத்திரிகை விநியோகிப்பது பெரும் சவாலான பணிதான். இதனை சமாளிக்க, கட்சி பிரமுகர் ஒருவரை அப்பணிக்கு பொறுப்பாக்கி முக்கிய நிர்வாகிகள் பிரபலங்களுக்கு நேரில் சென்று பத்திரிகை விநியோகிப்பதை கடைபிடித்து வருகிறார்கள்.
அதுவும் முடியாத பட்சத்தில், தினசரிகளில் விளம்பரத்தை போட்டு, இதையை அழைப்பாக ஏற்று இல்லத்திருமண விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பார்கள்.
வழக்கமான இந்த நடைமுறையில்தான், ஒரு புரட்சியை உண்டுபண்ணியிருக்கிறார், டி.என். சிவக்குமார். கட்சிக்காரர்கள் அனைவரையும் ஆள் வைத்து திருமண மண்டபம் ஒன்றிற்கு வரவழைத்தார். வீட்டு கல்யாண பத்திரிகையை மேடையில் அடுக்கி வைத்துக்கொண்டு, வந்திருந்த நிர்வாகிகளை வரிசைகட்டி நிற்க வைத்து பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்களை கொடுப்பதை போல, கல்யாண பத்திரிகையை கொடுக்க ஆரம்பித்தார்.
ஒருங்கிணைத்த திருச்சி மாவட்டமாக இருந்த சமயத்தில், நான்கு மாவட்டங்கள் சேர்ந்து இருந்திச்சி. இன்றைக்கு ஒரே திருச்சி மாவட்டத்துக்கே 4 மாவட்ட செயலாளர்கள். அந்த நான்கு பேரில் ஒருத்தர்தான், டி.என். சிவக்குமார். தனது பெயருக்கு பின்னால் மா.செ. என்ற கட்சிப்பதவி ஒட்டிக்கொண்டவிடனே, முதல்வர் கனவில் சிறகடிக்க கிளம்பிவிடுவார்கள் போல … என கழக உடன்பிறப்புகளின் முனுமுனுப்பு மண்டபத்தில் எதிரொலித்தது.
– சதா







Comments are closed, but trackbacks and pingbacks are open.