கோவில்பட்டியில் தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

GO BACK  முதல்வர் மு.க.ஸ்டாலின் – யார் அந்த சார் என்று கோஷங்கள் எழுப்பி கருப்பு பலூன்களை பறக்க விட்டு போராட்டம்*

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் – தமிழக அரசினை கண்டித்து அதிமுக சார்பில் கடந்த 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டியை பின்தொடர.....

ஒத்திவைக்கப்பட்ட போராட்டம் இன்று நடைபெறும் என்று அதிமுக அறிவித்து இருந்தது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடையாது, நடத்தக் கூடாது என்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் அனுமதி மறுத்தனர்.

குறைவான முதலீட்டில் நிலையான வருமானம் -

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்நிலையில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தடையை மீறி  முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் அதிமுகவினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு GO BACK  முதல்வர் மு.க.ஸ்டாலின் – யார் அந்த சார் என்று கேள்வி எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உள்பட 200க்கும்  மேற்பட்டவர்களை  கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையிலான போலீசார்  கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

 

—  மணிபாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.