‘ரேஜ்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
‘இயக்கி: புரொடக்சன்ஸ் அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில், ரிவெஞ்ச் த்ரில்லராக தயாராகியுள்ள ‘ரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்போது வெளியாகியுள்ளது.
சென்னையில் வாடகை கார் ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் வாழ்வில் நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம், அவன் வாழ்க்கையையே எப்படி மாற்றுகிறது என்பது தான் இப்படத்தின் மையம்.
இப்படத்தில் புதுமுகங்களான ஷான் நாயகனாகவும், ஷெர்லி பபித்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர். பவன் ஜினோ தாமஸ், ஆர்யன், பிரதோஷ், விக்ரம் ஆனந்த் ஆகியோர் வில்லன் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் முன்னணி நடிகர்களான சரவணன், முனீஸ்காந்த், ராமசந்திரன், மணிகண்டன், அஜித் கோஷி, காயத்ரி ரெமா, கிச்சா ரவி, காலா பீம்ஜி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். சென்னை, கேரளா, பொள்ளாச்சி ஆகிய ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
தொழில்நுட்பக் குழு
ஒளிப்பதிவு: எம்.எஸ். நவீன்குமார்.
இசை : விபீன் ஆர்
எடிட்டிங் : பிரேம் பி.
கலை இயக்கம் : நீலகண்டன்
ஸ்டண்ட்: யுனிவர்ஸ் ராஜேஸ்.
பாடல்கள் – மதன் கார்க்கி, விவேக், திருமாலி, அபிலாஷ் பிரிட்டோ.
பாடியவர்கள் – G
ஜி.வி. பிரகாஷ், கார்த்திக், சைந்தவி, மாளவிகா சுந்தர், திருமாலி.
— ஜெ.டி.ஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.