அங்குசம் பார்வையில் ‘ராவ் பகதூர்’ [ தெலுங்கு]
தயாரிப்பு: சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, அனுராக் ரெட்டி, ஷரத் சந்திரா, ஈஸ்வரன் விஜயராகவன். டைரக்டர்: வெங்கடேஷ் மஹா, வழங்குபவர்: தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு. ஆர்டிஸ்ட்: சத்ய தேவ், விகாஸ் முப்பாரலா, தீபா தாமஸ், பாலா பரசர், ஆனந்த் பாரதி, பிரனாய் வாகா, மாஸ்டர் கிரண், ஒளிப்பதிவு: கார்த்திக் பார்மர், இசை: சமரன் சாய், தயாரிப்பு வடிவமைப்பு: ரோஹன் சிங், பிஆர்ஓ: ‘எஸ்-2’ சதீஷ்
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வழங்கும் ‘ராவ் பகதூர்’ங்கிற தெலுங்குப் படம், ஆங்கில சப்-டைட்டிலுடன் பிரஸ் ஷோ போடுவதாக பி.ஆர்.ஓ..’எஸ்-2’ சதீஷ் வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிய தகவலில் இருந்த தெலுங்கு நடிகர்-நடிகைகள் பட்டியலில் நமக்குத் தெரிந்த முகங்கள் எதுவுமே இல்லையே, போகலாமா? வேணாமா?ன்னு மனசுக்குள்ள டவுட் வந்துச்சு. முப்பது வருசத்துக்கு முன்னால திருப்பதி போயிருந்த போது மோகன்பாபுவின் ‘பெத்தராயுடு’ தான் நாம் பார்த்த நேரடித் தெலுங்குப் படம். அதில் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி நடிச்சிருந்ததால தான் அந்தப் படத்தைப் பார்த்தோம். அது தான் நாம பார்த்த ஒரே தெலுங்குப் படம்.
அதனால, இந்தப் படத்துக்குப் போவோமே, என்னதான் சொல்றாய்ங்கன்னு பார்ப்போமேன்னு முடிவு பண்ணிட்டு பிரசாத் பிரிவியூ தியேட்டருக்குள் போனோம்.
ஆந்திராவின் புவனாலயம் என்ற அரண்மனை. அங்கே கேன்சராலும் மனப்பிறழ்வு நோயாலும் பாதிக்கப்பட்ட அரச குடும்ப வாரிசாக இருக்கிறார் ராமப்பா ராவ் பகதூர்[ சத்யதேவ்]. “உண்மை செத்துப் போச்சு…..உண்மை செத்துப் போச்சு…” என புலம்பிக்கொண்டே இருக்கிறார். அவருடைய மனைவி ரேணுகா [ தீபா தாமஸ்] தனி அறையில் தனக்குத் தானே சிறைவைத்துக் கொண்டு, ராமப்பாவுடன் பல ஆண்டுகளாக பேசாமல் இருக்கிறார். ஒரு நாள் ராமப்பாவின் நிலைமை ரொம்ப சீரியஸாகிவிட, டாக்டர் ஆச்சாரிக்கு [ விகாஸ் முப்பாலா] போன் செய்கிறார் ராமப்பாவின் மூத்த மகன் லாவணா.
அரண்மனைக்கு வரும் தனது நீண்டநாள் நண்பனான டாக்டர் ஆச்சாரியிடம் ஒரு ரகசியத்தை ராமப்பா சொல்ல, இதனால் அதிர்ச்சியாகிறார் டாக்டர் ஆச்சாரி. அந்த ரகசியம் என்ன? கேன்சரிலிருந்து ராமப்பா மீண்டாரா? சும்மா நச்சுன்னு செமத்தியான க்ளைமாக்ஸுடன் விடை தருகிறார் இந்த ‘ராவ் பகதூர்’.
படத்தின் ஹீரோன்னா அது கண்டிப்பாக கதையும் திரைக்கதையும் அதை பக்காவாக ஸ்கீரினில் கொண்டு வந்த டைரக்டர் வெங்கடேஷ் மஹா தான். நம்ம தமிழ் சினிமாவில் அப்பப்ப, சின்ன பட்ஜெட்டில், நல்ல கண்டெண்டுடன் படங்கள் வந்து மக்களை பரவசப்படுத்துவது போல, தெலுங்கிலும் இந்த மாதிரி படங்கள் வந்து அங்குள்ள மெகா ஸ்டார்களையே கதிகலங்கச் செய்வதுண்டு. அந்த வரிசையில் வந்து அசரடித்திருக்கிறார் இந்த ‘ராவ் பகதூர்’. அந்தக் காலத்து அரண்மனையின் வெளிப்புறம், உள்ளே செட், ஐந்தே கேரக்டர்கள் இவற்றை வைத்துக் கொண்டு, வெங்கடேஷ் மஹா வெளுத்துக் கட்டியிருக்கார். அதிலும் க்ளைமாக்ஸில் பிணமாகக் கிடக்கும் ராவ் பகாதூரின் காதில் தீபிகா தாமஸ், டாக்டர் ஆச்சாரி சொல்லும் ரகசியங்களால் தியேட்டரேஅதிர்கிறது.
ராவ் பகதூர் வம்சத்தில் எல்லோரும் வலது கையை ஏன் மார்பில் வைத்தபடியே இருக்கிறார்கள் என்பதற்கு சுவாரஸ்யமான சங்கதி, அவர்களின் டிஃபெரெண்டான டான்ஸ் மூவ் மெண்ட் என பின்னிப் பெடெலெடுத்துட்டார் டைரக்டர்.
ராவ் பகதூராக சத்யதேவ். நடிப்பில் மனுஷன் அசரடிக்கிறார். இவரது மனைவியாக தீபிகா தாமஸ், வேலைக்காரி அச்சம்மாவாக பாலா பரசர், சத்யதேவின் மூத்த மகனாக பிரனாய் வாகா, இளைய மகனாக மாஸ்டர் கிரண், போலீஸ் அதிகாரியாக ஆனந்த் பாரதி, அனைவருமே நடிப்பில் ஸ்கோர் பண்ணியிருந்தாலும் டாக்டர் ஆச்சாரியாக வரும் விகாஸ் முப்பாலா தான் டாப் ஸ்கோரர். ”டேய் ராமுடு, என்னதாண்டா சொல்ல வர்றே” என அவர் பேசும் டயலாக் மாடுலேஷன் வேற லெவல்.
1968-க்கு ஏற்ற லைட்டிங்கை கொண்டு வந்து ராவ்பகதூருக்கு நல்ல சப்போர்ட்டாக இருக்கிறார் கேமராமேன் கார்த்திக் பார்மர். சமரன் சாய் பின்னணி இசை, குறிப்பாக க்ளைமாக்ஸில் நம்ம ‘சூரியன்’ படத்தில் கவுண்டர் தீ மிதிக்கும் சீனில் வரும் “ஸ்டார்ட் தி மியூசிக்’ டைப்பில் பேக்ரவுண்ட் ஸ்கோர் போட்டு செமத்தியாக ஸ்கோர் பண்ணிவிட்டார் சமரன் சாய். ஆர்ட் டைரக்டர் ரோஹன் சிங்கின் கலை நுணுக்கமும் பக்காவா செட்டாகிருக்கு.
முதல் அரை மணி நேரம் கொஞ்சம் சலிப்பாக இருந்தாலும், அதன் பின் க்ளைமாக்ஸ் வரை ஃபுல் எண்டெர்டெய்மெண்ட் தான்.
அங்குசம் பார்வையில் ‘ராவ் பகதூர்’ [ தெலுங்கு] 68/100
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.