அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“அடிக்கடி மாறும் மனிதனின் மனமும் குணமும் தான் ‘நிறம்’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

‘கே.ஸ்கொயர் சினிமாஸ் ‘ கே.பிந்துமாதவி தயாரிப்பில்,  பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம்’ படத்தின்  டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூலை 30- ஆம் தேதி காலை நடந்தது.

நிகழ்ச்சியில்

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

ஹீரோயின் தான்யா ஹோப், பாடகிகள் ஸ்ரீநிஷா , பிரவஸ்தி, டான்ஸ் மாஸ்டர் சாய் பாரதி, நடிகை ப்ரீந்து மாதவி ஆகியோர் வழக்கம் போல இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி சொல்லிவிட்டு மீடியா ஆதரவையும் வேண்டினார்கள்.

நடிகர் நிதின் சத்யா

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

“இந்த படம் ஒரு நட்பின் அடிப்படையில் உருவானது. இயக்குநர் பலராம் கிருஷ்ணாவுடன் எனக்கு பல வருடங்களாக நட்பு உள்ளது. அதனால் இந்தப் படத்தில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், பல விஷயங்களில் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தேன். படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறார்கள். இயக்குநரின் அர்ப்பணிப்பும், தயாரிப்பாளரின் நம்பிக்கையும் இந்த படத்தின் பலம். முதல் படம் என்ற எண்ணமே வராத அளவுக்கு பலராம் கிருஷ்ணா சிறப்பாக இயக்கியிருக்கிறார். இந்த நல்ல படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது ஊடக நண்பர்களின் கையில்தான் இருக்கிறது”.

'நிறம்' டி. இமான்

“இந்த படத்தின் கதையை கேட்டவுடனேயே  வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் இருப்பதை உணர்ந்தேன். இயக்குநர் பலராம் கிருஷ்ணா தனது முதல் படத்திலேயே அனுபவமிக்க இயக்குநரைப் போல தெளிவான பார்வையுடன் பணியாற்றியிருக்கிறார்”.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இயக்குநர் பலராம் கிருஷ்ணா

“நிறம் என்பது ஒரு சாதாரண தலைப்பு அல்ல. ஒவ்வொரு மனிதனின் மனநிலையும், குணமும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். அந்த மாற்றங்கள்தான் இந்த படத்தின் மையக் கருத்து. இது ஒரு க்ரைம்-இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர். ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.  அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பால் இந்தப் படம் உருவாகியுள்ளது. நல்ல உள்ளடக்கத்தை மக்கள் எப்போதும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த படத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன். உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம்”.

'நிறம்'நாயகன் முகன்

” நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்  கதாநாயகனாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. ‘நிறம்’ ஒரு வித்தியாசமான க்ரைம் த்ரில்லர். இயக்குநர் பலராம் கிருஷ்ணா ஒவ்வொரு காட்சியையும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கியிருக்கிறார்”.

டெக்னீஷியன்கள்

இசை: டி.இமான், ஒளிப்பதிவு: சான்டோனியோ டெர்சியோ, எடிட்டிங் :    வி.ஜே.சாபு ஜோசப், ஸ்டண்ட் : தினேஷ் சுப்பராயன்  கலை இயக்குனர்: தாமோதரன்   இணைத் தயாரிப்பு : பி. ராஜேஷ், பிஆர்ஓ: சதீஷ் (எய்ம்).

—  ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.