ராஷ்மிகா மந்தனாவின் ‘தி கேர்ள் ஃபிரண்ட்’ டீஸரை ரிலீஸ் பண்ணிய விஜய் தேவரகொண்டா
நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா, தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’. பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை, கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மெண்ட் பேனர்கள் இணைந்து தயாரிக்கிறது. ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ ஒரு அழகான காதல் கதையைச் சொல்கிறது. இப்படத்தை தீரஜ் மொகிலினேனி மற்றும் வித்யா கோப்பினிடி ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இரு நாட்களுக்கு முன்பு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ படத்தின் டீசரை வெளியிட்டார்.
படம் குறித்து விஜய் தேவரகொண்டா என்ன சொல்றாருன்னா, “டீசரில் உள்ள ஒவ்வொரு காட்சியும் வெகு சுவாரஸ்யமாக உள்ளது. இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். 8 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் ராஷ்மிகாவை சந்தித்தேன். பல பெரிய வெற்றிகளைப் பெற்றாலும், இன்னும் அவர் மிகவும் அடக்கமாகவே இருக்கிறார்.
‘தி கேர்ள்பிரண்ட்’ படம், ஒரு நடிகையாக அவருக்கு அதிக பொறுப்பை அளித்துள்ளத. அந்த பொறுப்பை அவர் முறையாக ஏற்றுக்கொண்டு, தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்களின் இதயங்களைக் கவரும் இப்படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துகள்.”.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஹேஷாம் அப்துல் வஹாப்பின் பின்னணி இசையும், டீசரின் முடிவில் ராஷ்மிகாவின் உரையாடலும் அனைவரையும் கவர்வதாக அமைந்துள்ளது. ‘தி கேர்ள்பிரண்ட்’ விரைவில் திரைக்கு வர உள்ளது.
தொழில்நுட்பக் குழு:
– ஒளிப்பதிவு: கிருஷ்ணன் வசந்த்
– இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
– ஆடைகள்: ஷ்ரவ்யா வர்மா
– தயாரிப்பு வடிவமைப்பு: எஸ். ராமகிருஷ்ணா, மௌனிகா நிகோத்ரி
– மக்கள் தொடர்பு : யுவராஜ்.
— மதுரை மாறன்.