அங்குசம் பார்வையில் ‘ரத்னம்’ படம் எப்படி இருக்கு ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் பார்வையில் ‘ரத்னம்’ படம் எப்படி இருக்கு ?  தயாரிப்பு: ‘ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் & ஜி ஸ்டுடியோஸ்’ கார்த்திகேயன் சந்தானம், வினோத் சி.ஜே. டைரக்‌ஷன்: ஹரி. எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்: அசோக் நாராயணன். இணைத் தயாரிப்பாளர்கள்: கல்யாண் சுப்பிரமணியம், அலங்கார் பாண்டியன். நடிகர்—நடிகைகள்: விஷால், பிரியா பவானிசங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு, கெளதம் வாசுதேவ் மேனன், முரளிசர்மா, ஹரிஷ் பெராடி, முத்துக்குமார், ஜெயபிரகாஷ், துளசி, விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், ஒய்.ஜி.மகேந்திரா, விடிவி கணேஷ், கும்கி அஸ்வின், கணேஷ் வெங்கட்ராம்.

ஒளிப்பதிவு: எம்.சுகுமார், இசை: தேவி ஸ்ரீபிரசாத், ஸ்டண்ட் மாஸ்டர்கள்: பீட்டர்ஹெய்ன், கனல் கண்ணன், திலீப் சுப்பராயன், விக்கி, எடிட்டிங்: டி.எஸ்.ஜெய், நடனம்: தினேஷ், பாடல்கள்: விவேகா. ஆர்ட் டைரக்டர்: பி.வி.பாலாஜி. பி.ஆர்.ஓ.:நிகில் முருகன்.

அங்குசம் இதழ்..

1994 திருப்பதி வனப்பகுதியில் மூன்று பேர் கொண்ட காலிக்  கும்பல், பயணிகள் பஸ்ஸை ஆக்சிடெண்ட் பண்ணி, 26 பேரைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடிக்கிறது. க்ளைமாக்ஸ் நெருங்கும் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பு தான் இந்த சீனுக்கான காரணத்தை கனெக்ட் பண்ணுகிறார் டைரக்டர் ஹரி.

கட் பண்ணா.. வேலூர் காய்கறி மார்க்கெட்டில் விபச்சாரத் தலைவி தலைமையிலான ரவுடிக் கும்பல், கவுன்சிலர் பன்னீர்செல்வத்தை[சமுத்திரக்கனி } போட்டுத்தள்ள ஆவேசமாகப் பாய்கிறது. அப்போது வாழை இலை வெட்டும் கத்தியை எடுத்து விபச்சாரத் தலைவியைக் குத்திச் சாய்க்கிறார் சிறுவன் ரத்னம் { அந்தச் சிறுவன் வேற யாரு? நம்ம ஹீரோ விஷால் தான் ]. சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குப் போய் சில ஆண்டுகள் கழித்து ரத்னம் வெளியே வரும் போது எம்.எல்.ஏ.வாகிவிடுகிறார் பன்னீர்செல்வம். தனது சொந்தப் பிள்ளை போலவே வளர்க்கிறார். “மாமா..மாமா..” என பாசத்தைக் கொட்டுகிறார் ரத்னம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

பன்னீர்செல்வம் நடத்தும் டாஸ்மாக் பார்களுக்கு ரத்னம் தான் ஹெட். யோகிபாபு தான் மேனேஜர். பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று நியாத்திற்காக போராடும் ’கொள்கைக் கொலையாளிகள்’ தான் பன்னீரும் ரத்னமும் [ வாட் ஏ சினிமா மிராக்கிள் மிஸ்டர் ஹரி ].

ஒரு சீனில் எதேச்சையாக மல்லிகாவைப் [ பிரியா பவானிசங்கர் ] பார்க்கிறார் ரத்னம். எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்ற நினைப்பில் அவர் பின்னாலேயே போகிறார். திடீரென ஆந்திராவின் காரசாரமிக்க ரவுடிகள் கத்தி கபடாவுடன் மல்லிகாவை நோக்கிப் பாய, குறுக்கே புகுந்து அவர்களை தாறுமாறாக வெட்டிச் சாய்த்து, மல்லிகாவை காப்பாற்றுகிறார். அதன் பின் அவருக்கு பெர்சனல் செக்யூரிட்டியாகிவிடுகிறார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மல்லிகா தனது ஃப்ளாஷ்பேக்கைச் சொல்லும் போது ஆந்திராவின் மிகமிகப்பெரிய ரவுடிக்கும்பலான ராயுடு பிரதர்ஸ் அட்டகாசம் தெரிகிறது ரத்னத்திற்கு. இதெல்லாமே இடைவேளை விடுவதற்கு பதினைந்து நிமிடங்கள் முன்பு நடந்து முடிந்த பின் தான் இதான் கதை என நமக்கும் புரிகிறது.

கதைக்களத்திற்காக மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவை, நாகர்கோவில், இராமநாதபுரம், சென்னை என  பயணித்த டைரக்டர் ஹரி, இந்த ரத்னம் மூலம் ஆந்திராவிலும் ஆந்திரா பார்டர் அருகே உள்ள வேலூரிலும் திருத்தணியிலும்  டிராவல் பண்ணியிருக்கார். இந்தக் கதை நடக்கும் ஏரியாவும் கதையின் ஹீரோயின் பிரியா பவானிசங்கர் தான், ஆனால் ஹீரோ விஷாலுக்கு ஹீரோயின் இல்லை என்ற விஷயம் தான் புதுசே தவிர, மற்றபடி அதே ஹரி ஸ்டைல் படம் தான், அதே ஆக்‌ஷன் அதகளம், அதே ஸ்பீட் தான்.

இதில் விஷாலுக்கு நடிப்பு ஸ்கோப் என்றால் அம்மா சம்பந்தப்பட்ட சீன்கள் தான். ஆனால் ஸ்டண்ட் காட்சிகளில் ரொம்பவே ரிஸ்க் எடுத்து உடலை ரொம்ப ரொம்ப வறுத்தி கடுமையாக உழைத்திருக்கிறார். வாய்ஸ் மாடுலேஷனில் ஏதோ டல்லடிக்குதே விஷால் சகோதரா. ஹீரோயின் பிரியா பவானிசங்கரே எதிர்பார்த்திருக்கமாட்டார், இப்படிப்பட்ட டபுள் ரோல் கிடைக்கும் என்று. மாற்றுத்திறனாளியாக வரும் பிளாக் & ஒயிட் ஃப்ளாஷ்பேக்கிலும் சரி, நர்சிங் படித்து முடித்து, மெடிக்கல் காலேஜ் மாணவியாக வரும் கரண்ட் சீனிலும், விஷாலிடம் வெடித்து அழும் சீனிலும் சூப்பர் ஸ்கோர் பண்ணிருக்கார் பிரியா பவானிசங்கர். முரட்டு வில்லன் பீமா ராயுடுவாக வரும் முரளி சர்மா எப்பப் பார்த்தாலும் முகத்திலும் அக்குளிலும் பவுடர் போடுகிறார், லிப்ஸ்டிக் போடுகிறார், உறுமுகிறார், க்ளைமாக்சில் ரத்னம் கையால் தலை அறுபட்டுச் சாகிறார்.

யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் & கோ, காமெடி என்ற பெயரில் கடிக்கிறார்கள். ”எனக்காக ஏன் நிக்கிற.. எம்மேல எதுக்கு  அக்கறை..” “ஒரு லட்ச ரூபா வாட்சும் ஒண்ணார் ரூபா வாட்சும் ஒரே டைம் தான் காட்டுது” போன்ற இலக்கியத் தரம் மிகுந்த பாடல் வரிகளை எழுதி புல்லரிக்க வைக்கிறார் கவிஞர் விவேகா.

இந்த ரத்னத்தில் ரத்ன மாலை சூட்ட வேண்டும் என்றால் கேமராமேன் சுசுமாருக்கும் நான்கு ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கும் தான். அந்தளவுக்கு அவர்கள் கடின உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள். அதுசரி மிஸ்டர் ஹரி, க்ளைமாக்ஸில் பிராமணர்கள் எபிசோட்டைக் கொண்டு வந்து பல்ஸ் ரேட்டை எகிற வச்சுட்டீங்களே? ஏங்க அப்படி?

விக்ரமின் ‘சாமி’ சூர்யாவின் ‘சிங்கம்-1’ படங்களில் தமிழ்நாடு போலீசை எந்தளவுக்கு உயர்வாகவும் கம்பீரமாகவும் நேர்மையாகவும் ஹரி காட்டினாரோ, அதற்கு நேர்மாறாக இந்த ‘ரத்னத்’தில் தமிழ்நாடு & ஆந்திரா போலீசை டோட்டல் டேமேஜ் பண்ணிவிட்டார். ‘ரத்னம்’,, சத்தமும் இருக்கும் ரத்தமும் இருக்கு… சகலமும் இருக்கு.

-மதுரை மாறன்     

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.