பாஜகவை பதற வைத்த சொம்பு ! செங்கல் ! முட்டை !
பாஜகவை பதற வைத்த சொம்பு! செங்கல்! முட்டை ! – கடந்த தேர்தலில் ஒற்றை செங்கல்லை காட்டி 38 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றி பாஜகவை பதறைத்தார் உதயநிதி, நீட் விலக்கு கையெழுத்து இயக்க கூட்டத்தில் கோழி முட்டையையும். இந்தாண்டு நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் செங்கல் மற்றும் 29 பைசா போர்டையாம் காட்டி பாஜகவை மிரளவைத்தார், இதே பாணியில் கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் காலி சொம்பை காட்டி ராகுல்காந்தியும் பாஜகவை பதற வைத்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ,7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த 19ம் தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல் மற்றும் இரண்டாம் கட்டம் தேர்தலுக்கான , பிரச்சாரத்தின் போது திமுகவும் , பாஜகவும், காங்கிரஸும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் மாறி மாறி கடுமையாக விமர்சித்திருந்தனர் . குறிப்பாக பிரதமர் மோடி திமுக, மற்றும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார் பதிலுக்கு திமுகவும் காங்கிரஸ் கட்சிகளும் ஒரு படி மேலே போய் சில அடையாளங்களை காட்டி பாஜகவை அலறவிட்டனர்
அந்தவகையில் கர்நாடக மாநிலத்தில் 14 தொகுதிகளுக்கு வரும் 7ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஒரு பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, கடந்த 10 ஆண்டுகளில் பொதுமக்களின் ஏரளமான பணத்தை பிரதமர் மோடி கொள்ளையடித்துள்ளார். விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, வறுமை ஒழிப்பு குறித்து பிரதமர் மோடி வாயை திறப்பதே இல்லை.
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே முடியும். ஏழைகளின் பணத்தை பறித்து குறிப்பிட்ட சிலரை பாஜக கோடீஸ்வரர்களாக ஆக்கினார்கள். ஆனால், காங்கிரஸ் கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும். நாட்டின் 40 சதவீத சொத்துக்கள் ஒரு சதவீத பேரிடம் மட்டுமே உள்ளது. தேவையற்ற விஷயங்களை பேசி முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் வேளையில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்.
மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்துவிட்டு பதிலுக்கு பிரதமர் மோடி கொடுத்தது இந்த “காலி சொம்பு தான்” என்றும் பிரதமர் மோடியின் பாஜக கட்சி “பாரதிய சொம்பு கட்சி” எனவும் கடுமையாக விமர்சித்தார் இந்த சொம்பு பிரச்சாரம் தற்போது கர்நாடகா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி அதிமுக ஆட்சியில் மதுரைக்கு வந்து . எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒற்றை செங்கல்லை வைத்து அடிக்கல் நாட்டிவிட்டு சென்றார். இன்றுவரை கட்டி முடிக்காமல் இருக்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட. செங்கல்லை 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி செங்கல்லை காட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது நாடு முழுவதும் பெரியளவில் பேசுபொருளானது
தற்போது அதே செங்கல்லை , தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திலும் , இந்த கல்லை இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன். நீங்கள் மருத்துவமனையை கட்டிமுடிக்கும் வரை நான் இந்த செங்கல்லை கொடுக்க மாட்டேன். என செங்கல்லை காட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டார் , கூடவே 0.29 பைசா போர்டையும் கையில் எடுத்தார். அதாவது தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் கொடுத்தால் திருப்பி 29 பைசா கொடுக்கிறது பாஜக மோடி அரசு , பீகார் உபி போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரு ரூபாய்க்கு 7 ரூபாய் வரை திருப்பி தருகிறார்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமே பைசா கணக்கில் கொடுக்கிறார்கள் என்று விமர்சனம் செய்து பிரச்சாரத்தில் மீண்டும் பாஜகவை அலறவிட்டார்.
சமீபத்தில் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் தொடக்க கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி நீட் முதுநிலை படிப்பு தகுதித்தேர்வில் ‘முட்டை’ மதிப்பெண்கள் (அதாவது 0 மதிப்பெண்) எடுத்தாலே போதும் அவர்கள் பாஸ் ஆகிவிடுவார்கள் என்கிறார்கள். அப்புறம் எதற்கு அந்த தேர்வு , என கேள்வி எழுப்பி அதை குறிக்கும் வகையில் கோழி முட்டையை காட்டி , பிரதமர் மோடியை கிண்டல் அடித்தார் , இப்படி செங்கல், முட்டை , 29 பைசா என அடையாளப்படுத்தி பாஜகவை பதற வைத்த அமைச்சர் உதயநிதி பாணி பிரச்சாரத்தை கையில் எடுத்த காங்கிரஸ் “காலி சொம்பை காட்டி ‘பாரதிய சொம்பு கட்சி’ என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார் ,
தமிழகத்தில் பாஜகவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்படி செங்கலை வைத்து பதற வைத்தாரோ , அதே பாணியில் ராகுல் காந்தி காலி சொம்பை காட்டி மோடியை பதற்றத்தில் வைத்துள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்
– கேஎம்ஜி