தகாத உறவில் குழந்தை பெற்ற மனைவி கொலை : காதலன் கைது ! கணவன் தலைமறைவு ?
தகாத உறவில் குழந்தை பெற்ற மனைவி கொலை : காதலன் கைது ! கணவன் தலைமறைவு ? கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வெள்ளிமலை அருகே உள்ள எம்.வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னமுத்து. இவரின் மனைவி சீதா. தம்பதிகள் இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரையொருவர் பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில், போச்சம்பள்ளி அருகே உள்ள சிங்கிலேரிபட்டியில் மாந்தோப்பு ஒன்றில் சீதா காவலாளியாக தங்கி பணிபுரிந்து வந்தார். மாந்தோப்பு உரிமையாளரான பிரகாஷ் என்பவருடன், சீதா உறவில் இருந்து வந்த நிலையில், இருவருக்கும் பெண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. இதையறிந்து ஆத்திரமடைந்த சீதாவின் கணவர் சின்னமுத்து, பிரகாஷின் மாந்தோப்புக்கு தன் உறவினர்களுடன் சென்று மனைவியை தன்னுடன் வாழ வருமாறு கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதில், கடைசி வரை கணவருடன் செல்ல மறுத்து சீதா வாக்குவாதம் செய்த நிலையில், இதையறிந்து அங்கு வந்த பிரகாஷ், தன் காதலியின் கணவர் சின்னமுத்து மற்றும் அவரின் உறவினர்களை துப்பாக்கியால் சுட்டபோது சின்னமுத்துவின் உறவினர்கள் சிதறி ஓடிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சின்னமுத்து, தன்னுடன் வர மறுத்த மனைவியை கத்தியால் குத்திக் கொன்றார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாந்தோப்பு உரிமையாளர் பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சின்னமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர். இந்த தம்பதியின் 4 குழந்தைகளும், தாய், தகப்பன் இல்லாமல் அழுது கொண்டிருப்பது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
மணிகண்டன்.கா.