வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க…
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திருச்சிராப்பள்ளி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு.
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள இலால்குடி, மண்ணச்சநல்லூர், புள்ளம்பாடி மற்றும் திருவெறும்பூர் ஆகிய வட்டாரங்களில் காலியாகவுள்ள 5 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது.
எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 18.09.2026 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கான தகுதிகள் கீழ்க்காணுமாறு:-
வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தகுதிகள் :
1 கல்வித்தகுதி
ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது மூன்று மாதம் MS Office சான்றிதழ் படிப்பு (அல்லது) இளங்கலை கணினி அறிவியல் (B.sc (C.S) (அல்லது) இளங்கலை கணினி பயன்பாட்டியல் (BCA) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. வயது 35 வயதிற்க்குட்பட்டவர்கள்
3. அனுபவம்: ஊராட்சி அளவிலான சுயஉதவிக்குழு அல்லது கூட்டமைப்பில் குறைந்தது 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. இடம் : காலிப்பணியிடம் உள்ள வட்டாரத்திற்குட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
5.நிபந்தணைகள்
நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் மற்றும் பிற காரணங்களுக்காக, முந்தைய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் / புது வாழ்வுத் திட்டம் / IFAD திட்டம் மற்றும் பிற மாநில அரசுத் திட்டங்கள் / திட்டப்பணிகள் /செயல்பாடுகளிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கவோ அல்லது நீக்கப்பட்டிருக்கவோ கூடாது.
மேற்படி தகுதி உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழ்க்காணும் முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :-
இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
மகளிர் திட்டம்,
மாவட்ட ஆட்சியரகம் வளாகம்,
திருச்சிராப்பள்ளி 620001.
மின்னஞ்சல் முகவரி:– dpiu trc@yahoo.com, தொலைப்பேசி எண்:- 0431-2412726 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.