ஒரே நேரத்தில் ‘ட்ரோன்ஸ்’-ன் 3 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
ஜிஎம் மோர்கன் பிலிம்ஸ் தயாரிப்பில், ஆர் .ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ட்ரோன்ஸ்’ படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் லுக் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது.
வித்தியாசமான கற்பனை உலகம், ஹாரர் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த கதைக்களம் ஆகியவை “ட்ரோன்ஸ்” படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ உலகில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மேட் சயின்டிஸ்ட், டிடெக்டிவ், ஏஞ்சல், சூனியக்காரி மற்றும் பல புதிரான சம்பவங்கள் நிறைந்த கற்பனை உலகில் பயணிக்கும் வகையில், தமிழ் சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.
சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, பரிதாபங்கள் புகழ் டிராவிட் செல்வம், விஜய் டிவி புகழ் குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் மற்றும் இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் ஆர்ஜே தீபக் உள்ளிட்டோர் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு:ஜெயந்த் சேது மாதவன் , இசை: ஹரி எஸ்.ஆர்., எடிட்டிங்: சதீஷ் சூர்யா கலை இயக்கம் : கிஷோர், காஸ்ட்யூம் டிசைனர்: ஹர்ஷிகா ரமேஷ், பிஆர்ஓ : சதீஷ் ( எய்ம்)
ஃபைவ் ஸ்டார் செந்தில் இப்படத்தை உலகெங்கிலும் தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணுகிறார்.
இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் விரைவில் டிரெய்லர் ரிலீஸும் அதைத் தொடர்ந்து பட ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படலாம்.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.