பிடிஜி யுனிவர்ஸின் மூன்றாவது படைப்பு ‘ரெட்ட தல’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பிடிஜி யுனிவர்ஸின் மூன்றாவது படைப்பு ‘ரெட்ட தல’ BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற்கு , “ரெட்ட தல” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்புடன் கூடிய அசத்தலான ஃபர் ஸ்ட் லுக் வெளியீட்டு விழா, , சென்னையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள,பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில் தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் பேசும் போது
“இந்த நாளுக்காக நிறைய உழைத்திருக்கிறோம். எங்களுடன் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்திற்கு பர்ஃபெக்டான ஹீரோ அருண் விஜய் தான். தான்யா ரவிச்சந்திரன் மிக அழகான படங்கள் செய்துள்ளார். சித்தி இத்னானி பல அற்புதமான படங்கள் செய்துள்ளார். இவர்கள் மூவரையும் இணைத்து அற்புதமான கதைச் செய்துள்ளார் திருக்குமரன். அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதைகள் தேர்ந்தெடுப்பதில், தயாரித்து வழங்குவதில் ரசிகர்களுக்கு நல்ல படைப்புகள் தர வேண்டும் என்பதில் வெகு கவனமாக இருக்கிறோம்.ரெட்ட தல

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

அந்த வகையில் திருக்குமரன் மிகச்சிறந்த திரைக்கதையை செய்துள்ளார். மனோஜ் பினோ என் கஸின், அவர்தான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் எல்லா வேலைகளையும் பார்த்துக்கொள்கிறார். உலகளவில் பல முன்னணி கம்பெனிகளில் டேட்டா ரிஸ்க் இருக்கிறது. அந்த டேட்டாக்களைப் பாதுக்காக்கும் பணிகளைத் தான் எங்கள் கம்பெனி செய்து வருகிறது. 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நாங்கள் சேவைகளை வழங்கி வருகிறோம். சினிமா எனக்கு அவ்வளவு பிடிக்கும். அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது, சாம் சி எஸ் செய்வதை என்னால் செய்ய முடியாது, ஆனால் அவர்களை வைத்து அற்புதமான படைப்புகளை உருவாக்க முடியும்.

அந்த ஆசையில் தான் இந்தத் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளோம். ஹாலிவுட்டில்எப்படி பெஸ்ட் சினிமா கொடுக்கிறார்கள்.அதை எப்படி நாம் கோலிவுட்டில் கொடுக்கலாம் என முயற்சிப்பதே எங்கள் நோக்கம். எங்கள் நிறுவனத்தில் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொன்றையும் கவனமாக ஆராய்ந்து, ஆட்டோமெடிக்காக இயங்குமாறு செய்துள்ளோம்.இன்று உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. என் படக்குழுவினர், நடிகர் நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

BTG நிறுவன நிர்வாகத் தலைமை அதிகாரி மனோஜ் பினோ பேசியது”ஒரே நேரத்தில் 3 படங்கள் எடுக்கிறோம். இப்போது அடுத்த கதைகளையும் கேட்டு வருகிறோம். எங்களால் ஒரே நேரத்தில் பல படங்களைக் கையாள முடியும் என்பதை நிரூபிக்க நினைக்கிறோம். இந்தப்படம் ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் உங்களுக்கு ஆச்சர்யம் தரும், டிவிஸ்ட் இருக்கும். உங்களைக் கண்டிப்பாக இப்படம் மகிழ்ச்சிப்படுத்தும். நன்றி.

இயக்குநர் மோகன் ராஜா பேசியதாவது…
ரெட்ட தல அற்புதமான ஃபர்ஸ்ட் லுக், மொத்தக்குழுவிற்கும் என் வாழ்த்துக்கள். இன்று 2024ல் நல்ல சினிமா வருவதில்லை என்ற குற்றசாட்டு வருகிறது. அதைப் போக்கும் நிறுவனமாகபிடிஜி இருக்கும் என நம்புகிறேன். இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும்”.

இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது…
சில படங்களின் டைட்டில் கேட்கும்போது இவ்வளவு நாளா இந்த டைட்டில் வைக்கலையா எனத் தோணும். ரெட்ட தல அப்படி ஒரு டைட்டில். ஃபர்ஸ்ட் லுக் மிரட்டலாக இருக்கிறது. தயாரிப்பாளர்ப் பாபி சின்ன சின்ன விசயங்களுக்குகூட எனக்குக் கால் செய்வார். தயாரிப்பாளர் மாதிரியே இருக்க மாட்டார். அவர் மிகப்பெரிய முதலாளி. அவரது மெசேஜ் கால் பார்த்தால் பாசிடிவிட்டியாக இருக்கும். ஒரு படம் ஹிட்டாககதை 50 பர்செண்ட் இருந்தால் போதும், மீதி பாசிட்டிவிட்டி இருந்தாலே அந்தப்படம் பயங்கர ஹிட்டாகும். இந்தப்படத்தில் பணியாற்றும் அனைவரும் இந்தப்படம் ஜெயிக்க வேண்டும் என்பதில் பாசிட்டிவிட்டியுடன் இருக்கிறார்கள்.இந்தப்படத்தில் பாடல்கள் எல்லாமே பெரிய ஹிட்டாகும்.”

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ரெட்ட தல
ரெட்ட தல

நடிகை தான்யா ரவிச்சந்திரன்
“பாபி சாரை இப்போது தான் நேரில் பார்க்கிறேன்.அவர் அமெரிக்காவில் இருந்து அவ்வப்போது அப்டேட் தந்துகொண்டே இருப்பார். என்னை இந்தப்படத்தில் தேர்ந்தெடுத்தற்கு இயக்குநர் திருக்குமரனுக்கு நன்றி. மனோஜ் சாருக்கும் நன்றி. அருண் விஜய்யுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி”.

நடிகை சித்தி இத்னானி,
“இந்தப்படத்தின் வைப் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப்படத்தில் நானும் இருப்பது மிகமிக சந்தோஷமாக உள்ளது. திருக்குமரன் சாருக்கு நன்றி.”

இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் பேசும் போது,”
இந்த இடத்தில் நான் நிற்கக் காரணமான அனைவருக்கும் நன்றி. ஃபர்ஸ்ட் லுக் தனித்துவமாக இருக்க வேண்டும் எனச் சொன்ன போது, ஒரு கான்செப்ட் வைத்து உருவாக்கலாம் என இந்த ஐடியாவை அருண் விஜய் சாரிடம் சொன்னேன். இது என்ன மாதிரி ஐடியா எனக்கேட்டார். இரண்டு மிருகங்கள் ஒன்றை ஒன்று அடித்து சாப்பிட நினைக்கிறது அது தான் கரு என்றேன். எல்லோருக்கும் பிடித்திருந்தது. பாபி சார், மனோஜ் சார் எவ்வளவு செல்வானாலும் பராவாயில்லை, இதைத்தான் எடுக்கணும் என்றார்கள். அருண் விஜய் உடம்பை வில்லாக வளைத்து, இதற்காக உழைத்துள்ளார். இந்த டைட்டில் ஏ ஆர் முருகதாஸ் சாருடையது. அருண் விஜய் சாருக்கும் எனக்கும் இந்த டைட்டில் பிடித்திருந்தது. இந்தக்கதைக்கு இது தான் சரியாக இருக்குமெனத் தோன்றியது. ஏ ஆர் முருகதாஸ் சாரிடம் கேட்டேன், அவர் வைத்துக்கொள் என அன்போடு தந்தார். தயாரிப்பாளர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற கடுமையாக உழைப்பேன்”.

நடிகர் அருண்விஜய்
“இந்தப்படம் எனக்கு மிக நெருக்கமான படம். இந்தக்கதை மிக மிகப் பிடித்த கதை. இதற்கு முன் மனோஜ் அண்ணா அனுப்பிய கதைகள் கேட்டிருக்கிறேன்.நான் எப்போதும் ஆடியன்ஸ் மைண்ட்செட்டில் இருந்து தான் கதைக் கேட்பேன். திருக்குமரன் இந்தக்கதையைச்சொல்லி, ரெட்ட தல என்று சொன்ன போது அட்டகாசமாக இருந்தது. அவர் ஆரம்பத்திலேயே படத்திற்காகக் கடுமையாக உழைத்து வருவது எனக்குப் பிடித்துள்ளது. அவருக்காக நானும் கடுமையாக உழைப்பேன். இந்தப்படம் கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும் நன்றி”.

நடிகர் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தினை BTG Universal நிறுவனம் சார்பில் பாபி பாலச்சந்திரன், மிகப்பிரம்மாண்ட படைப்பாகத் தயாரிக்கிறார்.
பல முன்னணி சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய திரு டாக்டர் M.மனோஜ் பெனோ, தற்போது BTG Universal நிறுவனத்தின் தலைமை திட்ட இயக்குநராக பொறுப்பேற்று திரைப்படங்களின் அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார்.

சாம் CS இசையமைக்கிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். அன்பறிவு மற்றும் பிரபு மாஸ்டர் இணைந்து சண்டைக்காட்சிகளை வடிவமைக்கவுள்ளனர். அருண்சங்கர் துரை கலை இயக்கம் செய்கிறார். கிருத்திகா சேகர் உடை வடிவமைப்பு பணிகளைச் செய்கிறார். பப்ளிசிட்டி டிசைனிங் பணிகளை சசி & சசி செய்கிறார்கள். வெங்கட்ராம் பப்ளிசிட்டி போட்டோகிராஃபராக பணியாற்றுகிறார். மக்கள் தொடர்பு பணிகளை சதீஷ், சிவா (AIM) செய்கிறார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.