வெப்ப அலையின் வெங்கொடுமையும் ! வெறுப்புக் கனல் கக்கும் மோடியும் !

0

வெப்ப அலையின் வெங்கொடுமையும் ! வெறுப்புக் கனல் கக்கும் மோடியும்! நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. 89 தொகுதிகளுக்கு இரண்டாம்கட்ட வாக்குபதிவு ஏப்ரல் 26—ஆம் தேதி. முதல் கட்டப் பிரச்சாரத்தின் போது தமிழ்நாட்டிற்கு எட்டு முறை வந்து திமுகவைத் திட்டித்தீர்த்தார் பிரதமர் மோடி. பொளேர் பொளேர் என திமுகவும் பதிலடி கொடுத்தது. சென்னை பாண்டிபஜார் மற்றும் கோவையில் ரோடு ஷோ காட்டினார் மோடி.

அதே கோவையில் ரோட்டின் செண்டர்மீடியனை தாவிக்குதித்து ஒத்த  ஸ்வீட் பாக்ஸ் வாங்கி, மோடியின் ஒட்டு மொத்த ரோடு ஷோவுக்கும் மலர் வளையம் வைத்தார் காங்கிரஸின் நம்பிக்கை நட்சத்திரம் ராகுல்காந்தி.

4 bismi svs

இப்போது இரண்டாம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தில், ”இந்துக்களின் சொத்தைக் முஸ்லிம்கள் கொள்ளையடிக்க திட்டம் வகுக்கிறது காங்கிரஸ். பெண்களின் தாலியை அறுக்கப் போகிறது காங்கிரஸ். வாரிசு வரி என்ற பெயரில் நாட்டு மக்களின் சொத்தையே அபகரிக்க திட்டம் போடுகிறது காங்கிரஸ்” இப்படி  மோடியின் நாக்கு மதவெறுப்புக் கனலை கக்கிக் கொண்டிருக்கிறது.  பா.ஜ.கவுக்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் அலை ஆர்ப்பரிப்பதை சகித்துக் கொள்ள முடியாமல் மூளை கலங்கிப் போய், ஆத்திரத்தைக் கொட்டி வருகிறார் மோடி.

அடுத்தடுத்து கிறிஸ்தவர்களை நோக்கியும் கிறிஸ்தவ மிஷனரிகளை நோக்கியும் மோடியின் நாக்கு கனல் கக்கலாம். இந்தியா முழுவதும் இப்போது அடிக்கும் வெப்ப அலை வெங்கொடுமை குறித்து ‘ஆரஞ்சு அலெர்ட்’ அறிவித்திருக்கிறது வானிலை மையம். ஆனால் மோடியின் நாக்கு கக்கும் கனல் கொடுமையைப் பார்த்தால், ‘ரெட் அலெர்ட்’ அறிவிக்கலாம் போல.

- Advertisement -

-கரிகாலன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.