அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பெருகி வரும் தரைக்கடைகள் ! வேதனையில் வியாபாரிகள் சங்கம் ! நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

திருச்சி வயலூர் ரோடு, புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் காளிமுத்து தலைமையில் வியாபாரிகள் திரண்டு வந்து, திருச்சி மாநகராட்சி மண்டலம் -5 உதவி ஆணையர், திருச்சி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி, திருச்சி அரசு மருத்துவமனை காவல் ஆய்வாளர் ஆகியோரை தனித்தனியே நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது.

திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் இருந்து வயலூர் சாலையில் எங்கள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமான இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூராக ரோட்டிற்கு இருபுறமும் நடை மேடை பாதையில் தள்ளுவண்டி கடைகள், தரைக்கடைகள் பெருகிக்கொண்டு வருவதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக கடைகள் பெருகிக்கொண்டே வருகின்றன. அதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். அதுசமயம் எங்கள் அனைத்து கடை அருகிலும் தள்ளுவண்டி கடைகள், தரைகடைகள் பெருகி கொண்டே வருகின்றன.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

2026 June 11 - 17 Angusam Book

வியாபாரிகள் முன்னேற்ற சங்கம்அதுசமயம் வியாபாரிகள் அனைவரும் அவரவர் கடைகளுக்கு அளவீடு முத்திரை, தொழில் வரி,  உணவு லைசென்ஸ் போன்ற சட்டப்படியான வரிகள் அரசு மற்றும் மாநகராட்சிக்கு செலுத்தி மிகுந்த சிரமத்துடன், கடை நடத்தி வருகிறோம். இப்போது புதிதாக பெரியார் மாளிகை அருகில் பிரியாணி கடைகள், காளான் பானி பூரி கடைகள், டிபன் கடைகள் மற்றும் உய்யக்கொண்டான் திருமலை செக்போஸ்ட் அருகில் சிப்ஸ் வண்டி கடைகள் பெருகி வருகின்றன. ஆகையால் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு  வேண்டிக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு கொடுக்கும் நிகழ்வின் போது, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர்கள் ஏ.பி.ரவி, பி.கே.ஆனந்த், யோகேஸ்வரன், நடராஜன், ராஜேந்திரன். துணைச் செயலாளர்கள் ராஜன், திருநாவுக்கரசு, பொன்ராஜ், உஜ்ஜீவி, வெங்கடேஷ், கண்ணன்,செயற்குழு உறுப்பினர்கள் வீரப்பன், மனோன்மணி, பிரவீனா,செங்கமுத்து, பிலால் முகமது, மோகன் முரளி, ரவிச்சந்திரன், தங்கராசு, கோவிந்தராஜ், கமல்ராஜ், ராஜா கணேசன், சுடலை மூர்த்தி, முருகேசன்,  சத்யராஜ், பாலகிருஷ்ணன், கண்ணன் , ரஞ்சனி மற்றும் வியாபார சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.