அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் ஒளிரும் ரோட்டரி இண்டர்நேஷனல் !
ரோட்டரி சர்வதேச அமைப்பின் (Rotary International Board) தலைவர் Rtn. யின்கா பாபலோலா (Yinka Babalola) மற்றும் துணைத்தலைவர் எம்.எம்.எம். முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் முன்னிலையில், ரோட்டரி அறக்கட்டளைக்கு (The Rotary Foundation) தங்களின் அசாதாரணப் பங்களிப்பை வழங்கிய ஆர்க் க்ளம்ப் சொசைட்டி (Arch Klumph Society – AKS) யை சேர்ந்த 47 உலகளாவிய சாதனையாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணம் எவன்ஸ்டன் நகரில் உள்ள ரோட்டரி சர்வதேச உலகத் தலைமையகத்தில் (One Rotary Center) இந்தச் சிறப்பு விழா நடைபெற்றது.
ஆர்க் க்ளம்ப் சொசைட்டி (Arch Klumph Society – AKS) என்பது, ரோட்டரி அறக்கட்டளையின் மிக உயர்ந்த நன்கொடையாளர் பிரிவு. ரோட்டரியின் 6-வது சர்வதேசத் தலைவரான ஆர்க் க்ளம்ப் நினைவாக இப்பெயரிடப்பட்டுள்ளது. ரோட்டரி அறக்கட்டளையின் உலகளாவிய நற்பணிகளுக்காகத் தன் வாழ்நாளில் $250,000 அமெரிக்க டாலர் (சுமார் ₹2.10 கோடி) அல்லது அதற்கு மேல் பங்களிப்பு வழங்கும் உறுப்பினர்கள் இந்த மதிப்புமிக்க AKS கிளப்பில் சேர்க்கப்படுகிறார்கள்.
இந்த நிதியானது உலக அமைதி, நோய் தடுப்பு, குறிப்பாக போலியோ ஒழிப்பு, தூய்மையான குடிநீர், கல்வி மற்றும் உள்ளூர் பொருளாதார மேம்பாடு போன்ற முக்கியப் பிரிவுகளில் உலகளாவிய மாற்றங்களை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது
”ரோட்டரி அறக்கட்டளைக்கு அவர்கள் காட்டிய அசாதாரணமான தாராள மனப்பான்மை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் தாராள மனப்பான்மை ரோட்டரியின் உண்மையான உணர்விற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவதோடு, உலகெங்கிலும் உள்ள சமூகங்களில் ஒரு நீடித்த தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.” என்பதாக, தனது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார் ரோட்டரி இண்டர்நேஷனலின் துணைத்தலைவரும் எக்ஸெல் குழுமத்தின் தலைவருமான எம்.எம்.எம். முருகானந்தம்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.