ரோட்டரி RMBF திருச்சிராப்பள்ளி பிரிவின் பதவியேற்பு விழா!
ரோட்டரி RMBF திருச்சிராப்பள்ளி பிரிவின் 2026-27 ரோட்டரி ஆண்டிற்கான புதிய தலைவர் மற்றும் இயக்குநர்கள் குழுவின் பதவியேற்பு விழா ஜூலை-07 புதன் அன்று, திருச்சி ஹோட்டல் பிளாசம் கதம்பம் ஹாலில் நடைபெற்றது.
இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக நவநீதா பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸின் நிர்வாக இயக்குநர் அனந்தகிருஷ்ணன்; கோல்டன் கேட்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் ஆர்.ரவிச்சந்திரன் மற்றும் சேர்மன் டி.சௌந்தர்ராஜன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
சேர்மன் மொஹம்மது நாசரின் வரவேற்பில், துணை சேர்மனாக ஜே.செந்தில்குமார்; செயலாளராக ஜெ.கிளமெண்ட் ஞானராஜ், பொருளாளராக எம்.ஜோசப்ராஜ் நிர்வாக பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்கள்.
மேலும், ஆலோசகராக எம்.பார்த்தசாரதி; பயிற்சியாளராக ஜி.கேசவன்; ஒருங்கிணைப்பாளராக கே.பி.கீர்த்தி; வருகைப்பதிவு இயக்குநராக எஸ்.மாரிமுத்து; வளர்ச்சிப்பிரிவு இயக்குநராக ஆர்.கோகுலகிருஷ்ணன்; நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு இயக்குநராக கே.சுந்தரமூர்த்தி; சேவைப்பிரிவு இயக்குநராக கே.அனந்தகுமார்; தொழில்சார் சேவைப்பிரிவு இயக்குநராக ஆர்.வெங்கடேசன்; ஐ.டி. ஒருங்கிணைப்பாளர் எஸ்.பிரசாத்; கல்வி ஒருங்கிணைப்பாளராக ஆர்.வெங்கடாச்சலம் மற்றும் ஐ.பி.சி. கே.எஸ். மொகம்மது நாசர் ஆகிய 2026-27 ரோட்டரி ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.









Comments are closed, but trackbacks and pingbacks are open.