தமிழக அரசு முத்திரையுடன் சபரிமலையில் இருமுடி பை ! பக்தர்கள் அதிர்ச்சி!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்குச்செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் நவநீதகி ருஷ்ணன்(வயது 35). கணினி மையம் நடத்தி வருகிறார். இவர், தனது நண்பர்களுடன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றார். செல்லும் வழியில் நேற்று முன்தினம் பம்பையில் கேரள அரசின் தேவசம் போர்டு சார்பில் நடத்தப்படும் கடையில் இருமுடி கட்டுவ தற்கான பைகளை நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பக்தர்கள் வாங்கினர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அந்த பை, பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச வேட்டியில் தயாரிக்கப்பட்டு இருந்ததை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக அரசின் முத்திரையுடன் ‘பொங்கல் 2025’ என்றும், வேட்டி, சேலை வழங்கும் திட்டம், பதிவு எண், ரகம், தொகுப்பு எண், முகமை-தமிழ் நாடு பஞ்சாலைக்கழகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

1 இருமுடி பை ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த வேட்டி எப்படி வந்தது? என்பது குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் பக்தர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளனர். தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு இலவச மாக வழங்கிய வேட்டிகள் எப்படி கேரள அரசின் கடைக்கு விற்பனைக்கு வந்தது?, இலவச வேட்டிகள் மொத்தமாக விற்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ள பக்தர்கள், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.