முதல்முறையாக போலீஸ் கெட்டப்பில் அர்ஜுன் தாஸ்!
பிரம்மாண்ட படமான ‘பாகுபலி’யைத் தயாரித்த ‘அர்கா மீடியா ஒர்க்ஸ்’ பேனரில் ஷோபு யர்லகட்டா, பிரசாத் தேவினேனி, இப்போது தமிழில் தயாரித்து முடித்திருக்கும் படம் ‘ஜான் டோ’. [ John Doe]. இதில் அர்ஜுன் தாஸ் முதல்முறையாக போலீஸ் அதிகாரி வேஷத்தில் நடிக்கிறார். இவருடன் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத், உட்பட பலர் நடித்துள்ளனர். மதுமிதா தாஸ் டைரக்ட் பண்ணியுள்ளார். இவருடன் இணைந்து நிகோலஸ் செவாலியர் திரைக்கதை எழுதியுள்ளார்.
ஒளிப்பதிவு : பிரீதா ஜெயராமன், இசை : முஜீப் மஜீத், எடிட்டிங்: விஜய் வெங்கட் ரமணன், பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
ஷூட்டிங் முடிவடையும் நிலையில் இருப்பதால், ‘ஜான் டோ’வின் ஃபர்ஸ்லுக் ரிலீசாகியுள்ளது. படத்தைப் பத்தி டைரக்டர் மதுமிதா என்ன சொல்றாருன்னா…
“ஜான் டோ என்பவன் பாதிக்கப்பட்டவனா? கொலைகாரனா? அல்லது ஒரு குழந்தையா? என்பதை யாரும் எளிதில் யூகிக்க முடியாத அளவுக்கு படத்தின் ஸ்கிரிப்ட் இருக்கும். இதில் சந்துரு என்ற போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் தாஸ் அற்புதமாக நடித்துள்ளார்” என்கிறார்.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.