ருத்ராட்ச மாலை to சினிமா
மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரைச் சேர்ந்த யங்க் கேர்ள் ஒருவர் தன்னோட ஃபேமிலியுடன் சேர்ந்து கும்பமேளா வந்து ருத்ராட்ச மாலை வியாபாரம் செஞ்ச்சு வந்தார். இவரது க்யூட் ஐ மற்றும் அழகிய தோற்றம் காண்போரை வசீகரிச்சுப்புடுய்ச்சு.
இன்ஸ்டா இன்புளூயன்சர் ஒருத்தர் இவரை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்யவே ஆல் சோஷியல் மீடியாக்களில் பெரும் வைரலா மாறிப்புட்டார் அந்த பெண். அவரது தோற்றத்தை வைத்து அவருக்கு ‘மோனலிசா போஸ்லே’ என்று நெட்டிசன்கள் பெயர் சூட்டிப்புடாய்ங்க.

அப்பாலே செல்ஃபி வெறியர்களின் தொந்தரவு தாங்கமுடியாம கும்பமேளாவிலிருந்து பார்த்து வந்த மாலை வியாபாரத்தை மூட்டைக் கட்டி தன்னோட சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டார் மோனலிசா.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆனாலும் சமூக வலைதளங்களில் நீக்கமற நிறைஞ்ச்சுட்டார். யூடியூப் சேனல், இன்ஸ்டாகிராம் பக்கம் என இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவாகிப்புடுச்சு.
இச்சூழலில் விரைவில் பாலிவுட் ஹீரோயினாகவும் அறிமுகமாக போறார் மோனாலிசா.
பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தனது புதிய படத்தில் மோனலிசாவை நாயகியாக நடிக்கவைக்க இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிச்சிருக்கார். இதற்காக மோனலிசாவின் வில்லேஜூக்கு போய் அவரை சந்தித்து கமிட் செய்ய வைச்சுப்புட்டார் சனோஜ்.
இப்படத்தில் நடிகர் ராஜ்குமார் ராவின் சகோதரர் அமித் ராவ் கதாநாயகனாக நடிக்க இருக்கார்.