துருப்பிடித்து இத்துப்போன ஷட்டர்கள் … ஆக்கிரமிப்பில் வெண்ணாறு ! கடைக்கண் காட்டுமா அரசு ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

Frontline hospital Trichy

காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர் வழித்தடங்கள் மற்றும் வடிகால் அமைப்புகளை சீர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார், காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவன தலைவர் தர்ம.சுவாமிநாதன்.

“தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் கூடவிருக்கும் சூழலில், காவிரி டெல்டா விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளை உரிய முக்கியத்துவம் கொடுத்து பரிசீலிக்க வேண்டும். போதுமான நிதி ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.” என்பதாக கோரிக்கை விடுக்கிறார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இது தொடர்பாக, அங்குசம் இதழ் சார்பில் அவரை அணுகியபோது, ” திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் கோட்டூர் ஒன்றியம் பைங்காட்டூர் ஊரில் கோரையாற்றிலிருந்து பிரியும் பாசன ஆறான பொன்னுங்குண்டன் ஆற்று தலைப்பு உடையும் அபாயத்தில் உள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையின்போது, தலைப்பு பகுதியில் சுழல் மாதிரி  தண்ணீர் உள்வாங்கியது. இரவு 11 மணிக்கு அந்த ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து முன்னின்று அந்த உடைப்பை தற்காலிகமாக மணல் மூட்டைகளை வைத்து சரி செய்தனர்.

ஆக்கிரமிப்பில் வெண்ணாறு !
ஆக்கிரமிப்பில் வெண்ணாறு !

மூன்று மாதங்கள் ஆகியும், அந்த உடைப்பை சரிசெய்யவில்லை. அடுத்து ஒரு மழை வந்து தண்ணீர் வந்தாலே, தலைப்பு உடைப்பு ஏற்பட்டுவிடும். அவ்வாறு உடைப்பு ஏற்பட்டால், அக்கரைக் கோட்டகம், தேவதானம், களப்பாள், கருப்புக்கிளார், 57 குலமாணிக்கம், 83 குலமாணிக்கம், கும்மட்டித்திடல், குறிச்சிமூலை, மண்ணுக்குமுண்டான், நல்லூர், நொச்சியூர், ஒரத்தூர், பைங்காட்டூர், தெற்கு நாணலூர், திருக்களார், வாட்டார், வெங்கத்தான்குடி உள்ளிட்ட 80 கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மேலும், 50,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகும். நீர்வளத்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டோம். மேலிடத்திற்கு தகவல் சொல்லியிருக்கிறோம். நிதி ஒதுக்கினால் நிச்சயம் செய்துவிடுவோம் என திருத்துறைப்பூண்டி ஏ.இ. பிரபாகரன் சொல்கிறார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

வீடியோ 

அடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் ஐயனாபுரம் தொண்டராப்பட்டிக்கும் இடையில் வெண்ணாற்றின் கிளை ஆறான ஆனந்தகாவிரியின் வடிகால் வாய்க்கால் ஷட்டர் பழுதடைந்து பல ஆண்டுகளாகிறது. இன்னும் சீர் செய்ய மறுக்கிறார்கள். ”புதுக்கோட்டை மழை பெய்தால் புங்கனூர் நெல்விளையும்” என்பார்கள். புதுக்கோட்டையில் மழை பெய்தால் அந்த மழைநீர் இந்த வாய்க்கால் வழியாகத்தான் வெண்ணாற்றில் வடியும். கல்லப்பெரம்பூர் வரையில் சுமார் மூன்று இலட்சம் ஏக்கர் பரப்பளவில் இந்த ஆற்றை நம்பி விவசாயம் செய்து வருகிறார்கள்.

மூன்றாவதாக, கல்லணையிலிருந்து தென் பெரம்பூர் வரையில் வெண்ணாற்றின் நீர்வழித்தடத்தை சரி செய்ய வேண்டும். சில குறிப்பிட்ட கிராமங்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆறு ஆக்கிரமிப்புகளால், அடைப்புகளால் அதன் நீரோட்டம் தடைபட்டுக்கிடக்கிறது. கரை உடைப்பெடுத்து அருகிலுள்ள விவசாய நிலத்தில் ஆற்று நீர் பாய்ந்தோடும் அவலநிலையும் நீடிக்கிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வருடம் தோறும் வெண்ணாற்றை தூர்வாருகிறோம் என்ற பெயரில், பெயருக்கு சிக்கல் இல்லாத இடங்களில் கணக்குக்கு தூர் வாருவதாக காட்டி வருகிறார்கள். இதனை முழுமையாக தூர் வார வேண்டுமெனில், குறைந்தது 50 கோடியாவது நிதி ஒதுக்கீடு செய்தாக வேண்டுமென்று அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள். வெண்ணாற்றை தூர்வாரினால், கழிமுகப் பகுதியான நாகப்பட்டினம் வரையில் நூற்றுக்கணக்கான டெல்டா மாவட்டங்கள் பயன்பெறும்.

இதுபோன்று, காவிரி டெல்டா மாவட்டத்தில் முக்கியமான ஆறின் நீர் வழித்தடங்களை அதன் வடிகால் அமைப்புகளை சரிசெய்யாமல் விட்டுவிட்டால், பெருமழையின் போது வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடும். அது ஒட்டுமொத்த விவசாயத்தையுமே அழித்துவிடும். இதனை இயற்கை பேரிடர் என்றுகூட எடுத்துக் கொள்ள மாட்டார்கள். விவசாயிகளுக்கு சொற்ப இழப்பீடு கூட கிடைக்காமல் போய்விடும். பயிர் மூழ்கியது போலவே, பயிர் செய்த விவசாயியும் கடனில் மூழ்கும் நிலைதான் உருவாகும்.” என எச்சரிக்கிறார், தர்ம.சுவாமிநாதன்.

 

—   ஆதிரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.