தமிழ் சினிமாவில் முதல் முயற்சி, புது முயற்சி! -‘சப்தம்’ பட சங்கதிகள்!
7G Films நிறுவனம் சார்பில் 7G சிவா தயாரிப்பில், ‘ஈரம்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’.
ஒலியை மையமாக வைத்து, இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ளது ‘சப்தம்’ வரும் 28 ஆம் தேதி ஆம் தேதி தமிழ் , தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது. இதை முன்னிட்டு படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பிப்ரவரி 19- ஆம் தேதி மாலை சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தத
இந்நிகழ்வினில் பேசியவர்கள்…
ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன்
“இயக்குனர் அறிவழகன் சாருடைய ஈரம் படத்தில் நான் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி அதன் பிறகு ‘மகாமுனி’ மூலம் ஒளிப்பதிவாளரானேன். அந்தப் படத்தைப் பார்த்து, அறிவழகன் என்னை இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக மாற்றினார். அதற்கு அவருக்கு நன்றிகள். இப்படம் எனது வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிக முக்கியமான படம். இது போல ஒரு படம் மீண்டும் அமைவது கடினம். இந்த படத்திற்காக குழுவாக இணைந்து கடினமான உழைப்பை வழங்கியுள்ளோம். இந்த படத்தில் ஹீரோ ஆதி யும்படக்குழுவினரும் முழு ஒத்துழைப்பையும் வழங்கினர்”.

எடிட்டர் சாபு ஜோசப்
“இந்த மேடையில் நான் நிற்க காரணம் 15 வருடம் முன் ஈரம் படத்தின் டிரெய்லரை எடிட் செய்ய இயக்குநர் அறிவழகன் தந்த வாய்ப்பு தான். அதன் பிறகு வல்லினம் அதிலிருந்து, வாழ்க்கை இந்த மேடை வரை என்னைக் கொண்டு வந்துள்ளது. சப்தம் படத்தைப் பொறுத்தவரை கிரியேட்டிவாக வேலை பார்க்க முழு சுதந்திரம் இருந்தது. சின்ன சின்ன விசயங்கள் இதில் நிறைய சேர்த்திருக்கிறார் அறிவழகன். சவுண்டுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். கண்டிப்பாக ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகக் கடினமாக உழைத்துள்ளனர். இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும்”.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆடியோகிராஃபர் உதயகுமார்
“அறிவழகனின் ஈரம் படத்தில் வேலை பார்க்க வில்லை என்ற வருத்தம் இருந்தது. இந்தப் படத்தில் அது நீங்கி விட்டது. பொதுவாக இயக்குநர்கள் கதை சொல்லும் போது, சவுண்டுக்கு என்றே இரண்டு காட்சிகள் வைத்திருக்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால் இந்தப்படம் முழுவதுமே சவுண்டை வைத்துத் தான். எங்களுக்கு இந்த மாதிரி படம் கிடைப்பது அரிது. எனக்கு இப்படம் கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சி.
என் குருநாதர் தீபன் சக்கரவர்த்தி சார் ‘ஊமை விழிகள்’ மாதிரி படங்கள் எல்லாம் செய்தவர். இந்த ‘சப்தம்’ அந்த ‘ஊமை விழிகள்’ உணர்வைத் தரும். தமிழில் ஒரு சில இயக்குநர்கள் தான் டெக்னிகலாக படம் செய்வார்கள். அதில் அறிவழகன் மிக முக்கியமானவர். தொழில் நுட்பக் கலைஞர்கள் சவுண்டுக்கு முக்கியத்துவம் தந்து, பெரும் ஒத்துழைப்பு தந்துள்ளனர் .இந்தப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்”.
இயக்குனர் அறிவழகன்
“நீண்ட இடைவேளைக்குப் பிறகு என்னுடைய படம் தியேட்டருக்கு வருகிறது. ஈரம் படத்தில் தண்ணீரை வைத்து புதுமை செய்தது போல், இப்படத்தில் சவுண்டை வைத்துச் செய்யலாம் என்ற போது நிறைய சவால்கள் இருந்தது. தண்ணீரில் ஹாரர் எனும் போது அந்த ஆவியின் உருவத்தைக் காட்டுவது, மிக எளிதாக இருந்தது. ஆனால் சவுண்டை வைத்து பேயை காட்டுவது எப்படி என கதை எழுதும் போதே சவாலாக இருந்தது. சவுண்டில் தியேட்டரில் டால்ஃபி சவுண்ட் புரமோ வருமல்லவா, அந்த குவாலிட்டியை திரையில் கொண்டு வர திட்டமிட்டோம்.தயாரிப்பாளர் 7G சிவா இப்படத்திற்கு மிக உறுதுணையாக இருந்தார். படத்தின் பட்ஜெட் பெரிதான போது டெக்னிகல்களை புரிந்து கொண்டு இப்படத்திற்கு முழு ஆதரவாக நின்றார். ஏற்கனவே டிஸ்டிரிபூசனில் இருந்ததால் படத்தினை பற்றிய முழு புரிதல் அவரிடம் இருந்தது.

படம் கேட்கும் அனைத்து செலவுகளையும் செய்யுங்கள் என்றார். அவரால் தான் இந்தப்படம் இந்த அளவு தரத்துடன் வந்துள்ளது. மேலும் எனது தொழில் நுட்ப கலைஞர்களான ஆடியோகிராஃபர் உதயகுமார், எடிட்டர் சாபு, ஒளிப்பதிவாளர் அருண், இசையமைப்பாளர் தமன், ஆர்ட் டைரக்டர் மனோஜ் என எல்லோரும் இணைந்து இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.ஹாரரில் பல ஜானர்கள் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.
ஈரம் படம் உங்களை ஒரு அனுபவத்திற்குள் கொண்டு சென்றது போல, இந்தப்படம் மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும். நாம் நினைத்த கதையை ஒருவர் நம்பி உள்ளே வர வேண்டும், அது தான் எனக்கு கம்ஃபடபிள்.ஆதி என்னை நம்பி உள்ளே வந்தார். இந்தப்படம் மிகவும் வித்தியாசமான ஹாரர் அனுபவமாக இருக்கும். என் நேர்மை தான் என்னை இங்கு கொண்டு வந்துள்ளது என நம்புகிறேன்”.
ஹீரோ ஆதி
“அறிவழகன் சார் இயக்கத்தில் ஈரம் மாதிரி இன்னொரு படம் கிடைக்குமா? என நினைத்தேன். அதை மீண்டும் அறிவழகன் எனக்குத் தந்துள்ளார். இந்தப்படத்தில் பாராநார்மல் இன்வஸ்டிகேட்டராக நடித்துள்ளேன். இது முழுக்க முழுக்க இந்த டீமின் படம். அவர்கள் உழைப்பு தான் முழுப்படமும். ஹாலிவுட் படம் மாதிரி என அடிக்கடி சொல்வோம் ஆனால் இங்கு நம்ம சினிமாவை ஹாலிவுட்டை தாண்டிய தரத்தில் உருவாக்கியிருக்கும் படம் தான் சப்தம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”.
இப்படத்தில் ஆதி, லக்ஷ்மிமேனன்,சிம்ரன், லைலா, கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்பக் கலைஞர்கள்
எழுத்து, இயக்கம் – அறிவழகன்
இசை – தமன் S
ஒளிப்பதிவு – அருண் பத்மனாபன்
எடிட்டிங் – சாபு ஜோசப்
கலை இயக்கம் – மனோஜ்குமார்
ஸ்டண்ட் – ஸ்டன்னர் சாம்
பாடலாசிரியர் – விவேகா, சவுண்ட்
மிக்சிங் -உதய் குமார்
ஒலி வடிவமைப்பு – Sync Cinema,
மார்க்கெட்டிங் புரமோஷன் – DEC
மக்கள் தொடர்பு – சதீஷ்குமார் S2 Media
— மதுரை மாறன்.