ஏரிக்கரையெங்கும் சாராய பாக்கெட்டுகள் ! சாராய வியாபாரிகள் பாக்கெட்டில் போலீசார் !!

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

ஏரிக்கரையெங்கும் சாராய பாக்கெட்டுகள் ! சாராய வியாபாரிகள் பாக்கெட்டில் போலீசார் !!

சேலம் மாவட்டத்தில் படு ஜோராக கள்ளச்சாராயம் விற்பனை !

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

விழுப்புரம் மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தி 22 பேர் பலியான சோகம் தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் படு ஜோராக கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்  மற்றும்  செங்கல்பட்டு  மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷச்சாராயம்  அருந்தி  22 பேர் உயிரிழந்த  சம்பவம்  தமிழகத்தை உலுக்கியது. இச்சம்பவம் தொடர்பாக  தமிழகம்  முழுவதும்  கடந்த இரண்டு  நாட்களாக  போலீசார் கள்ளச்சாராயத்தை  ஒழிக்க  அதிரடி  நடவடிக்கை  எடுத்து  தீவிரம்  காட்டி வருகின்றனர்.

3
அதிகாலையிலேயே சரக்கு ரெடி!

இந்த நிலையில்  சேலம்  மாவட்டம்  கல்வராயன்  மலைத்தொடர்  பகுதிகளில் கள்ளச் சாராயம்  காய்ச்சப்பட்டு  அங்கிருந்து  லாரி  டியூப்கள்  மூலம் கடத்தி வரப்பட்டு ஆத்தூர்  மற்றும் தலைவாசல் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருவதாக போலீசாரிடம் வீடியோ ஆதாரங்களுடன் பொதுமக்கள் புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

4

இதனிடையே  கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஆத்தூர்  காவல் உட்கோட்டத்திற்கு  உட்பட்ட  கல்வராயன் மலை அடிவாரப் பகுதியில்  தற்காலிக சோதனை சாவடி  மற்றும் 7 தனிப்படைகள்  அமைக்கப்பட்டு  போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், போலீசாருக்கே சவால் விடும் விதமாக , சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூர் ஏரிக்கரையில் அதிகாலை முதலே கள்ளச் சாராய  பாக்கெட்டுகளை விற்பனை  செய்து  வரும்  வீடியோ  தற்போது  வெளியாகியுள்ளது.

சாராய பாக்கெட்டுகளை வாங்க அதிகாலை  முதலே  குடிமகன்கள் குவிந்துள்ளனர். கள்ளச்சாராய  பாக்கெட்டுகள்  சட்டவிரோதமாக  விற்பனை  செய்யப்படுவதால் கூலித் தொழிலாளர்கள், மது போதைக்கு அடிமையாகி  வேலையிழந்து வருகின்றனர்.

போலீசாரைப் பார்த்து பல்லிளிக்கும் சாராய பாக்கெட்டுகள்!

சாராய  விற்பனை  குறித்து  அப்பகுதி  மக்கள் சட்டம்  ஒழுங்கு மற்றும்  மதுவிலக்கு  பிரிவு  போலீசாரிடம்  புகார்  அளித்தும்  போலீசார்  சாராய கும்பலுக்கு  ஆதரவாக  செயல்பட்டு  கல்லாகட்டுவதாக  அப்பகுதி  மக்கள் பகிரங்கமாக  குற்றம் சாட்டியுள்ளனர்‌ .

எனவே, மாவட்ட  நிர்வாகமும்  காவல்துறை  உயர்  அதிகாரிகளும்  உரிய நடவடிக்கை  மேற்கொண்டு  சாராய  விற்பனையை  தடுத்து சாராய வியாபாரிகளுக்கு  ஆதரவாக  செயல்படும்  போலீசார்  மீதும்  உரிய  நடவடிக்கை எடுக்க  வேண்டுமென  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழன் தேவ்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.