இடமாற்றத்திலும் இணைபிரியாத, காதலித்து கரம்பிடித்த கலெக்டர்கள் !
தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்தும்; 32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் உத்தரவை பிறப்பித்துள்ளார் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு.
இந்த இடமாற்றம் யாருக்கெல்லாம் சந்தோஷத்தையும் அசௌகர்யங்களையும் ஏற்படுத்தியது என்ற ஆராய்ச்சிகளுக்கு அப்பால், சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது.

தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பனியாற்றி வந்த ஆஷா அஜித் சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும்; தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை இணை கமிஷனராக பணியாற்றி வந்த விஷ்ணு சந்திரன் இராமநாதபுரம் மாவட்டத்தின் ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அருகருகே அமைந்த மாவட்டங்களான சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகியவற்றுக்கு ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் இவர்கள் இருவரும் காதலித்து கரம்பிடித்த கணவன் மனைவி ஆவார்கள்.
இதற்கு முன்னர், நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரன் பணியாற்றிய போது, பக்கத்து மாவட்டமான நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக அவரது மனைவி ஆஷா அஜித் பணியாற்றினார் என்பது கூடுதல் தகவல். தற்போது அருகருகே உள்ள மாவட்டங்களில் இருவரும் ஆட்சியர்களாக பணிகளை தொடர்கின்றனர், இக்காதல் தம்பதியினர்.
பிரீஸ்