சாத்தான் குளம் வழக்கில் தூக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந்த மிகவும் முக்கியமான காவல் துறையில் பணியாற்றும் மனித உறவுகள்.
திருமதி. ரேவதி வழக்கு சம்பவத்தை நேரில் பார்த்து பற்றி நீதிமன்றத்தில் கூறிய மிகவும் முக்கியமான சாட்சி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர்.
ப்யூலா செல்வகுமாரி. வழக்கு சம்பவத்தை நேரில் பார்த்தவர் நீதிமன்றத்தில் அதை தைரியமாக கூறிய மிகவும் முக்கியமான சாட்சி. சாத்தான் குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர். ரவிச்சந்திரன் SSI சாத்தான்குளம் காவல் நிலையத்தில் CCTNS பணி பார்த்தவர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த சம்பவத்தை நேரில் கண்ணுற்றதை நீதிமன்றத்தில் தெளிவாக கூறிய மிகவும் முக்கியமான சாட்சி.
ஜெயசேகர் காவலர்/ ஜீப் ஓட்டுநர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றியுள்ள 1-ம் எதிரி ஸ்ரீதரின் ஜீப் ஓட்டுநர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சம்பவத்தை நேரில் கண்ணுற்றதாக கூறிய மிகவும் முக்கியமான சாட்சி. ஸ்ரீதர் செய்தவற்றை தெளிவாக நீதிமன்றத்தில் சொன்னவர்.
சங்கர் கோவில்பட்டி கிளை சிறைச்சாலை கண்காணிப்பாளர்.
பொன்ராஜ் Gr II சாத்தான்குளம் காவல்நிலையத்தில் Mail முதலிய கடித தொடர்புகளை பராமரித்து வந்துள்ளவர்.
மாரிமுத்து கோவில்பட்டி கிளை சிறைச்சாலையில் 20.06.2020 அன்று வாயில் பாராவில் இருந்துள்ள காவலர்.
கருப்பசாமி காவலர் மற்றும் ஜெயராஜின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது உடன் இருந்தது குறித்தும் விசராவை ஆய்வகத்திற்கு எடுத்து சென்றது குறித்தும் ஜெயராஜின் உடைகளை பெற்று கோவில்பட்டி நீதித்துறை நடுவரிடம் ஒப்படைத்தது குறித்தும் சாட்சியம் அளித்துள்ள காவலர்கள்.

முருகன் ( உதவி காவல் ஆய்வாளர்) பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜின் இறப்பு குறித்து புகாரை பெற்று கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய குற்ற எண் 649/2020 மற்றும் 650/2020 வழக்கை பதிவு செய்துள்ள உதவி காவல் ஆய்வாளர்.
சுதேசன் (காவல் ஆய்வாளர்) ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வழக்கை முதலில் புலனாய்வுக்கு எடுத்துக்கொண்டு பின்னர் சிபிசிஐடியிடம் வழக்கை ஒப்படைத்துள்ள கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர்.
வேல்முருகன் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் துப்புரவு வேலை பார்த்துள்ள நபர்.
கோபி பிரேத பரிசோதனையின் போது அதனை வீடியோ பதிவு செய்த ஆயுதப்படை 2-ம் நிலை இடைக்காவலர்.
அனில்குமார் இவ்வழக்கை விசாரித்துள்ள சிபிசிஐடி புலனாய்வு அதிகாரி.
விஜய்குமார் சுக்லா இவ்வழக்கை விசாரித்துள்ள சிபிஐ புலனாய்வு அதிகாரி.
மாரியப்பன் 19.01.2020ம் தேதி தூத்துக்குடி SPஅலுவலகத்தில் தொலைநுட்பப் பிரிவில் பணியாற்றியுள்ள உதவி ஆய்வாளர்.
கிருஷ்ணசாமி 19.01.2020 ஆம் தேதி துாத்துக்குடி SPஅலுவலகத்தில் தொலைநுட்பப் பிரிவில் பணியாற்றியுள்ள காவல் ஆய்வாளர்.
திருமதி. சுதர்சனா 06.02.2026ம் தேதி மதுரை மாவட்ட Cyber Crime காவல் நிலையத்தில் பணியாற்றியுள்ள சார்பு ஆய்வாளர்.
(தொடரும்)
வழக்கறிஞர் Dr நல்வினை விஸ்வராஜு







Comments are closed, but trackbacks and pingbacks are open.