“ராஜ்நகர் நலச்சங்கத்தின்” இரண்டாம் ஆண்டு பொங்கல் மற்றும் கலை விழா !
திருவெறும்பூரை அடுத்த, “ஒருங்கிணைந்த அம்மன் நகர் கிழக்கு – ராஜ்நகர் நலச்சங்கத்தின்” இரண்டாம் ஆண்டு பொங்கல் மற்றும் கலை விழா, பிப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெற்றன.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்நகரில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் இணக்கத்தையும், நல்லுறவையும் மேம்படுத்தும் வகையில், கண்களை மூடி பானை உடைத்தல், இசை நாற்காலி, பலூன் உடைத்தல், ஓட்டப் பந்தயம், கோலப்போட்டி, சமையல் போட்டி, சைக்கிள் பந்தயம் உள்ளிட்ட பல்வகையான போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் – பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஞாயிறு மாலை, குழந்தைகளும் மாணவர்களும் நடனம், பாடல், மேடைப் பேச்சு, ஓவியம் வரைதல் போன்றவற்றில் கலந்து கொண்டு, தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர், குடியிருப்பு வாசிகள் அவர்களது திறமைகளை வெகுவாகப் பாராட்டினர். இரண்டு நாட்கள் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகளை திரு S.மனோஜ்குமார் சிறப்பாக ஒருங்கிணைத்து நெறியாள்கை செய்தார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நலச் சங்கத்தின் நிர்வாகிகளான திரு V.ஏழுமலை, திரு SRP. வெங்கடசாமி, திரு பவித்திரன், திரு.பாஸ்கர் தலைமையிலான குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர். இரவு நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும் அனைவரும் ஒற்றுமையாக அமர்ந்து உண்ணும் வகையில், சுவையான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.