அடுத்த தீயை பற்ற வைத்த செந்திபாலாஜி

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

“திமுகவில் இணைந்துவிட்டார் செந்தில்பாலாஜி. ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தினார் செந்தில்பாலாஜி. பதிலுக்கு செந்தில்பாலாஜியை வரவேற்று ஸ்டாலினும் பொன்னாடை போத்தினார். ‘நீங்க இங்கே வந்ததுல எங்க எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. இனி இணைந்து செயல்படுவோம்…’ என்று செந்திலிடம் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். அதன் பிறகு வெளியே வந்த செந்தில்பாலாஜி மீடியாவிடம் பேசினார்.

தினகரனைப் பற்றி பெரிதாக எந்த விமர்சனத்தையும் அவர் முன்வைக்கவில்லை. அறிவாலயத்திலிருந்து கிளம்பிய பிறகு தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் போன் போட்டு பேசிய செந்தில்பாலாஜி, ‘அண்ணா அறிவாலயத்துக்குள் நான் போவேன் என கனவில் கூட நினைச்சது இல்லை. எத்தனையோ முறை இந்த வழியில் போயிருக்கேன். போகும் போதெல்லாம் ஏதோ விரோதி வீட்டைப் பார்க்கிற மாதிரிதான் இதைப் பார்த்திருக்கேன்.

Sri Kumaran Mini HAll Trichy

காலம்தான் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்து இருக்கு. ஆனால், தளபதியை சந்திக்கும் போதும், அவர் எனக்கும் பொன்னாடை போத்தும் போதும் ரொம்பவே கூச்சமாக இருந்துச்சு. அவரை எவ்வளவு முறை நானே கடுமையாக விமர்சனம் செஞ்சிருக்கேன். ஆனால், அவர் அதையெல்லாம் கொஞ்சமும் மனசுல வெச்சுக்கவே இல்லை. ரொம்ப வருஷம் பழகியவர் மாதிரி சாதாரணமாகத்தான் தளபதி பேசினாங்க. கூட இருந்த முன்னாள் அமைச்சர்கள் எல்லோருமே கொஞ்ச நேரத்துல கைகொடுத்து நட்பாகிட்டாங்க.

நான்கூட திமுகவுக்கு போனதும் எப்படி அங்கே இருக்கிறவங்களோட ஒன்றாக முடியும்னு நிறைய யோசிச்சேன். ஆனால், அந்த தயக்கத்தையும் கூச்சத்தையும் முதல் நாள்லயே போக்கிட்டாங்க..’ என்று சொல்லி சந்தோஷப்பட்டு இருக்கிறார்.
அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்வுகள் தொலைக்காட்சிகளில் நேரலை ஒளிபரப்பாக போய்க்கொண்டிருந்தது. வீட்டில் உட்கார்ந்து கலைஞர் டிவியில் செந்தில்பாலாஜி இணைப்பு விழாவை பார்த்துக் கொண்டிருந்தார் டிடிவி தினகரன். அவரோடு, வெற்றிவேலும் உடன் இருந்தார். ‘இவரு போனதால நமக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்ல..’ என்று சிரித்தபடியே சொல்லி இருக்கிறார் தினகரன். ஆனால் வலியோடுதான் அந்த சிரிப்பு இருந்ததாக சொல்கிறார்கள். ‘எடப்பாடி துரோகம் பண்ணிட்டாரு… ஓ.பி.எஸ். துரோகம் பணிட்டாரு என்றெல்லாம் இவ்வளவு நாளா பேசினோம். அது எல்லா துரோகத்தைவிட இந்தப் பையன் பண்ணிய துரோகம் பெருசா இருக்கே.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

இவன் அதிமுகவுக்கு போயிருந்தால் கூட நான் சந்தோஷப்பட்டு இருப்பேன். ஆனால், சம்பந்தமே இல்லாமல் எதுக்காக அங்கே போனான். அப்படின்னா இவ்வளவு நாளா அவனோட மனசுல திமுகவை பத்திய நெனப்புதான் இருந்திருக்குமா? இதுமாதிரி ஆட்களை வெச்சுகிட்டு எப்படி கட்சி நடத்த முடியும்? திமுகவுக்கு எதுக்கு இந்த வேலை சொல்லுங்க? நாம இதுவரைக்கும் எடப்பாடியைத்தான் விமர்சனம் செஞ்சிருக்கோம். திமுகவை நாம திட்டியதே கிடையாது. அப்படி இருக்கும்போது, அவங்க நம்ம கூடாரத்துல எதுக்கு கை வைக்கணும்?” என்று சற்று டென்ஷனாகவே பேசியிருக்கிறார்.

அதற்கு வெற்றிவேல், ‘அவங்க கட்சிக்குள்ள ஆயிரத்தெட்டு குழப்பம் இருக்கு. அதை சரி பண்ண அவங்களுக்கு வழி தெரியலை. யாரோ சொல்றதை கேட்டுட்டு இப்படி தப்பு தப்பான முடிவுகளை ஸ்டாலின் எடுத்துட்டு இருக்காரு. இனி நாம அதிமுகவை விமர்சனம் செய்யுறதை விட திமுகவைத்தான் அதிக விமர்சனம் செய்யணும்…’ என்று சொல்லி இருக்கிறார். அதை தினகரனும் ஆமோதித்து தலையாட்டி இருக்கிறார்.

அந்த எதிர்ப்பைத்தான் மதியம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படையாகவே காட்டினார் தினகரன். அதுவும் செய்தியாளர் ஒருவர், ‘இனி யாரும் உங்க கட்சியில் இருந்து மாற மாட்டாங்க என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?’ என்று கேட்க… டென்ஷன் ஆன தினகரன், ‘நீங்க சாகுற வரைக்கும் இப்போ இருக்கிற டிவியில் இருப்பீங்கன்னு உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?’ என்று திருப்பிப் பாய்ந்தார். இப்படியாக பேட்டி முழுக்க சிரித்துக் கொண்டே பேசினாலும், அந்த சிரிப்பிலும் டென்ஷன் இருந்தது” என்றார்.

“தினகரனின் அட்டாக்கை திமுக எதிர்பார்க்கவில்லை. இனி தினகரனுக்கு செந்தில்பாலாஜி மூலமாகவே பதில் கொடுப்பதுதான் சரியாக இருக்கும் என்று ஸ்டாலினிடம் சொல்லி இருக்கிறார்கள். அவரும் அதை ஆமோதிக்க… இனி தினகரனுக்கு எதிராக செந்தில்பாலாஜியின் சரவெடி வெடிக்க ஆரம்பிக்கலாம்”அது இந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடக்கும் மாபெரும் பொதுகூட்டத்தில் இருந்தே ஆரம்பிக்கும் எனலாம். அந்த பிரமாண்ட பொதுகூட்டத்திற்கு அமுமுக கட்சியில் இருந்து சில முக்கிய புள்ளிகள் இணைப்பு விழா நடக்கும் என இப்போதே அடுத்த பரபரப்பு தீயை பற்ற வைக்கிறார்கள் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.