வானம் பார்த்த பூமியையும் செழிக்க வைக்கும் சேவை (SEVAI)!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை மற்றும் கரூர் மாவட்டத்தில் தோகமலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய வட்டாரங்களில், பெரும் பகுதி இன்னும் வறண்ட நிலங்களாகவே உள்ளன. இவை வடகிழக்கு பருவமழையை மட்டுமே முழுமையாகச் சார்ந்துள்ளன. ஆண்டு முழுவதும் ஓடும் ஆறுகள் ஏதுமில்லை.

இத்தகைய வறண்ட கிராமங்களில்தான், சேவை ‘SEVAI’ கல்வி, கிராமச் செயல்பாடு மற்றும் மேம்பாட்டிற்கான சங்கம் கடந்த 25 ஆண்டுகளாகத் தனது நீர் மற்றும் மண் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

சேவையின் முன்னெடுப்புகள் குறித்து விரிவாகவே எடுத்துரைக்கிறார், SEVAI அமைப்பின் பொறுப்பாளர் கே. தேவேந்திரன்.

”மிகவும் அவசியமான இடங்களான, மழையை மட்டுமே நம்பியிருக்கும் வறண்ட கிராமங்களில் கவனம் செலுத்தினோம். பெய்யும் மழையில் சுமார் 80% வீணாக ஓடிவிடுகிறது. நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகக் குறைந்துள்ளது. மேலும், பெருக்கெடுத்து ஓடும் மழைநீர், மண்ணின் வளமான மேல் அடுக்கை அடித்துச் செல்வதுடன், கிராமத்து நீர்நிலைகளில் வண்டல் மண் படிவதற்கும் காரணமாகிறது. இதன் விளைவாக, விவசாயம் இலாபமற்றதாக மாறுகிறது. கோடைகாலத்தில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மக்கள் பிழைப்பு தேடி இடம்பெயர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

OFI அமைப்பின் ஆதரவுடன், SEVAI ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. “பெய்யும் இடத்தில் நீரைச் சேமித்தல், மண்ணை அதன் இடத்திலேயே தக்கவைத்தல்” என்பதே இதன் அடிப்படை. நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கிராமத்து நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை அகற்றும் பணியை, மக்களின் பங்களிப்புடன் (சிரமதானம்) மேற்கொண்டு, நீர் சேமிப்புத் திறனை அதிகரித்துள்ளனர். மழைநீர் வீணாவதைத் தடுக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், நீரோட்டப் பாதைகளில் தடுப்பணைகள், கசிவுநீர்க் குட்டைகள் மற்றும் பண்ணைக் குட்டைகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளன.

மண் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ், 15 வறண்ட கிராமங்களில் 612 ஹெக்டேர் பரப்பளவில் நிலத்தின் சமதளத்திற்கு ஏற்ப வரப்புகள் (contour and farm bunding) அமைக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகளில் இருந்து எடுக்கப்பட்ட வண்டல் மண், விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், மா, கொய்யா, வேம்பு மற்றும் பிற மர வகைகள் என ஒரு இலட்சத்திற்கும் அதிகமான உள்நாட்டு மரக்கன்றுகள் வரப்போரங்களில் நடப்பட்டுள்ளன.” என்பதாக சேவையின் முன்னெடுப்புகளை விவரிக்கிறார்.

SEVAI அமைப்பின் தகவல்படி, தாங்கள் இலக்கு வைத்த 3,447 குடும்பங்களில் 80% குடும்பங்களுக்கு இப்போது ஆண்டு முழுவதும் குடிநீர் மற்றும் உணவுப் பாதுகாப்பு கிடைத்துள்ளது. பயிர் விளைச்சல் 50% அதிகரித்துள்ளது, நிலத்தடி நீர்மட்டம் 8 முதல் 12 அடி வரை உயர்ந்திருப்பதோடு; தரிசாகக் கிடந்த 260 ஹெக்டேர் வறண்ட நிலங்களை மீண்டும் சாகுபடிக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் சமகால அதிசயங்களாய் வியப்பில் ஆழ்த்துகிறது.

—   கோவிந்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.