அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அனைவருக்கும் அரணாகத் திகழ்வது திராவிட மாடல் அரசு – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

“வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்காதவர்கள் என பாகுபாடின்றி அனைவருக்கும் அரணாக இருப்பதே திராவிட மாடல் அரசு” என திருவெறும்பூர் தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்தல் பிரசாரத்தின் போது பேசினார்.

திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட திருச்சி மாநகரம், பொன்மலை பகுதி 44-வது வார்டில் (மேல கல்கண்டார் கோட்டை, உடையார் தெரு, விவேகானந்தர் நகர், மிலிட்டரி காலனி உள்ளிட்ட பகுதிகளில்) அமைச்சர் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் ஆற்றிய உரையின் சுருக்கம்:

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

அன்பில் மகேஸ்தொகுதி வளர்ச்சிப் பணிகள்

நிதியொதுக்கீடு:

யாவரும் கேளீர்

கடந்த 2021 முதல் 2026 வரையிலான திராவிட மாடல் ஆட்சியில், இந்த 44-வது வார்டில் மட்டும் ₹19.47 கோடி மதிப்பீட்டில் சாலைகள், குடிநீர் வசதி, சிறுபாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

சாதனை ஒப்பீடு:

2016-2021 காலக்கட்டத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்தபோது, நிதி நெருக்கடி மற்றும் கொரோனா சூழலால் 10 கோரிக்கைகளில் 3 கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற முடிந்தது. ஆனால், தற்போதைய ஆட்சியில் 10 கோரிக்கைகளில் 7 கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த வளர்ச்சி:

கடந்த 5 ஆண்டுகளில் திருவெறும்பூர் தொகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக ₹450 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

அன்பில் அறக்கட்டளை: இதன் மூலம் ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, தனியார் நிறுவனங்களில் சுமார் 600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது.

அன்பில் மகேஸ்நான் முதல்வன் திட்டம்:

தமிழக முதல்வர் கொண்டு வந்த இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 48 லட்சம் பேருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு, அதில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னோடித் திட்டங்கள்:

தமிழகத்தின் முதல் அரசு மாதிரிப் பள்ளி துவாக்குடியிலும், மாணவர்களுக்கான ‘வானவில் மன்றம்’ காட்டூர் ஆதிதிராவிடர் பள்ளியிலும் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டன.

முக்கிய அடையாளங்கள்

தமிழகத் துணை முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட தமிழகத்தின் இரண்டாவது பெரிய ஜல்லிக்கட்டு மைதானம் நமது சூரியூர் கிராமத்தில் அமைந்திருப்பது பெருமைக்குரியது. இத்தகைய மாற்றங்கள் அனைத்தும் மக்கள் அளித்த வாக்கின் வலிமையால் சாத்தியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

அன்பில் மகேஸ்“முதலமைச்சர் அடிக்கடி குறிப்பிடுவது போல, தமக்கு வாக்களித்தவர்கள் மட்டுமன்றி, வாக்களிக்காத மக்களுக்கும் அரணாக விளங்குவதே இந்தத் திராவிட மாடல் அரசு. எனவே, உங்கள் ஓட்டின் வலிமையை உணர்ந்து, மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.”

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்வின் போது பகுதி கழகச் செயலாளர்கள் தர்மராஜ் வட்டக் கழக செயலாளர்கள் சுப்பிரமணி துரை முருகானந்தம்  மாமன்ற உறுப்பினர் பியூலா மாணிக்கம், சீதாலட்சுமி முருகானந்தம் மற்றும் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.