அங்குசம் பார்வையில் ‘சில நொடிகளில்’ படம் எப்படி இருக்கு ?
அங்குசம் பார்வையில் ‘சில நொடிகளில்’.
தயாரிப்பு: ‘எஸ்கொயர் புரொடக்ஷன் ‘ புன்னகை பூ கீதா. சப்போர்ட்டிங்: குளோபல் ஒன் மீடியா. டைரக்டர்: வினய் பரத்வாஜ். ஆர்ட்டிஸ்ட்: ரிஷி ரிச்சர்ட், ‘புன்னகை பூ ‘ கீதா, யாஷிகா ஆனந்த். ஒளிப்பதிவு: அபிமன்யு சதானந்தன், எடிட்டிங்: ஷைஜல், இசை: தர்ஷனா உட்பட ஐந்து பேர். பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, ரேகா, நாசர். லண்டனில் காஸ்மெட்டிக் சர்ஜனாக இருக்கார் ரிஷி ரிச்சர்ட். தாலி கட்ன பொண்டாட்டி ( புன்னகை பூ கீதா) ‘ ஜிக்’குன்னு இருந்தாலும் மாடலிங் யாஷிகா ஆனந்துடனும் மஜாவாக இருக்கார் ரிஷி.
ஒரு நாள் வீட்ல பொண்டாட்டி இல்லாதப்ப, யாஷிகாவை தள்ளிட்டு வந்து கட்டில் விளையாட்டு நடத்துகிறார் ரிஷி. சரக்கு டன் சேர்த்து போதை மாத்திரையும் சாப்பிட்டதால் ஓவர் மப்பாகி மல்லாக்க விழுந்து விடுகிறார் யாஷிகா. இந்த நேரம் பார்த்து புன்னகை பூ கீதா வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாக சொல்ல, மூச்சு நின்று போன யாஷிகாவைத் தூக்கி பெரிய மரப்பெட்டிக்குள் திணித்து விடுகிறார் ரிஷி. அதன் பின்னர் 93 நிமிடங்கள் ஓடும் படம் தான் இந்த ‘சில நொடிகளில் ‘ கதை முழுக்க லண்டனில் நடப்பதாலோ என்னவோ, படம் முழுக்க எல்லோரும் எந்நேரமும் சரக்கு அடித்த படியே இருக்கிறார்கள்.
ரிஷியைத் தவிர லேடீஸ் கேரக்டர் அத்தனை பேரும் ‘ ஹஸ்கி ‘ வாய்ஸில் தான் பேசுகிறார்கள். நமக்கு அது “இஸ்க்…இஸ்க்…” என்று தான் கேட்கிறது. இதான் உங்க ஸ்டைலா டைரக்டர் சார்? கோட் சூட், அள்ளி முடிஞ்ச ஹேர் ஸ்டைல்னு ஒரு டைப்பாத்தான் இருக்கிறார் ரிஷி. புன்னகை பூ கீதாவுக்கு எப்படியும் 40 வயசுக்கு மேல தான் இருக்கும். டைட் குளோசப் பில் முகத்தில் முத்தல் தெரிகிறது. ஆனாலும் பாடி ஷேப் & மேக்கப்பில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மாதிரி பளிச்சுன்னு இருக்கார்.
அந்த சல்சா டான்ஸில் செமத்தியாக அசத்தியிருக்கிறார் புன்னகை பூ கீதா. க்ளைமாக்ஸ்நெருங்கும் நேரத்தில் தான் புன்னகையின் பின்னால் இருக்கும் டெரர் ஃபேஸ் தெரிகிறது. நிஜ வாழ்க்கையில்யாஷிகா ஆனந்த் எப்படி இருக்காரோ, அப்படித் தான் இந்த படத்திலும் கேரக்டர் அமைந்துள்ளது. அது சரி, எதுக்கு இந்தப் படத்துக்கு ஐந்து பேர் இசையமைப்பாளர்கள்? இடைவேளை வரை ஏனோ தானோன்னு இருக்கு. இடைவேளைக்குப் பிறகு , அதிலும் கடைசி சில நிமிடங்கள் கொஞ்சம் நல்லாருக்கு இந்த’சில நொடிகளில்’.
-மதுரை மாறன்