அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சிரா இலக்கியக்கழகம் 2ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள்!

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சியில் இயங்கி வரும் சிரா இலக்கியக் கழகத்தின் 2ஆம் ஆண்டு நிறைவு விழா தமிழ்ச்சங்கத்தில் 28.12.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவிற்கு எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி அவர்களின் தலைமை தாங்கினார். சிரா இலக்கியக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிர்வா வரவேற்புரையைற்றினார். சிறப்பு விருந்தனராக கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் இயக்குநர் மற்றும் செயலாளர் அருள்தந்தை லூயிஸ் பிரிட்டோ கலந்துக்கொண்டார். தஞ்சை தாமு மற்றும் வழக்கறிஞர் மார்டீன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் சிரா இலக்கியக் கழகத்தின் செயலாளர் அரிமா பா. முகமது சஃபி ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் திருமதி தங்கபிரகாசி நிதியறிக்கையை வாசித்தார். சிரா இலக்கிய கழகத்தின் நிறுவனர் முனைவர் பா.ஸ்ரீராம் தொடக்கவுரையாற்றினார். நிகழ்வின் தொடக்கத்தில் மாணவி அத்விகா பாலாஜியின் வரவேற்பு நடனம் நடைபெற்றது.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

சிரா இலக்கியக்கழகம் ஆண்டு விழா ஆண்டு விழாவில் வல்லநாடன் இல.கணேசன் எழுதிய ‘என் மனவானில்’, கவிஞர் சாந்தகுமாரி எழுதிய ‘அமுது’, கவிஞர் செ.பாரதிராஜா எழுதிய ‘உணர்வுகளின் விரல் தடங்கள்’, கவிஞர் சுவேதா நடராஜன் எழுதிய ’மனதின் மொழி’ கவிஞர் ஆ.தேவகிருபா எழுதிய ‘பெருங்கொடை சிரா’ ஆகிய 5 நூல்கள் வெளியிடப்பட்டன. நூல்களைத் தமிழவேள் பெ.உதகுமார் மற்றும் புனித சிலுவை கல்லூரி பேராசிரியர் முனைவர்  ம.பிரேமா வெளியிட முனவர் சு.செயலாபதி, கவிஞர் செ.சக்திவேல், முனைவர் ஞா.எலிசபத்ராணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நூலாசிரியர்கள் அனைவரும் ஏற்புரை வழங்கினர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சிரா இலக்கியக்கழகம் ஆண்டு விழா வாழ்த்தரங்கில் கவிஞர்கள் பார்த்திப ஜெயசீலன், ப.விஜயகுமார், பாரதி கண்ணம்மா, கல்பனா, கோவை விஜய், வீரத்தமிழ் மகா, ரஃபிக், அனிதா டேவிட் ஆகியோர் உரையாற்றினர்.  தொடர்ந்து சிரா செல்வர் விருது 2025 எழுத்தாளர் ர.அப்துல் சலாம், பன்முக கலைஞர் த.முருகானந்தம், வி கல்பனா தர்மேந்திரா, முனைவர் சுகந்தி முரளி, கவிஞர் ஆங்கரை பைரவி, முனைவர் ஜா. சலேத், சமூக ஆர்வலர் கிரிஜா பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

சிரா இலக்கியக்கழகம் ஆண்டு விழா அரிமா மல்லிஸ்வரி நன்றியுரையாற்றினார். ஆண்டு விழா நிறைவுற்றப் பின்னர் அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இவ்விழாவில் தமிழ்ச்செம்மல் கோவிந்தசாமி, மருத்துவர் லெட்சுமி நந்தக்குமார், கேசவனன், பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் உள்ளிட்ட நகரத்தின் முக்கிய தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

 

—    ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.