சிறையிலிருந்து ஸ்கெட்ச் – திருச்சி ரவுடிகளால் பரபரப்பு
சிறையிலிருந்து ஸ்கெட்ச் – திருச்சி ரவுடிகளால் பரபரப்பு
தமிழக காவல்துறை சமீப காலமாக குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் ஏதாவது ஒரு மூலையில் துப்பாக்கி சத்தம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்தும், விசாரணை முடிக்கப்படாமல் இருக்கக்கூடிய வழக்குகளை உடனே முடிக்க கூறி உத்தரவிட்டுள்ளார்.
அதன் மூலம் ஒவ்வொரு மாவட்ட காவல் துறையும்,
தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
காவல்துறை கைது செய்த ரவுடிகளால் இனி குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில்,
மற்றொருபுறம் சிறைத்துறை விழிபிதுங்கி நிற்கிறது.
காரணம், ஒட்டுமொத்த ரவுடிகளும், கூலி படைகளும் ஒன்றாக சேர்ந்ததால், வெளியில் வந்து என்ன செய்யவேண்டும் என்கின்ற ஸ்கெட்ச்சை சிறையின் உள்ளேயே போட்டு வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் பெரும்பாலான முக்கிய ரவுடிகள் பிணையில் வெளியில் வருவதற்காக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
தீபாவளியை மையப்படுத்தி சில குற்ற சம்பவங்கள் நடைபெறவும் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.
குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக காவல்துறை எடுத்த நடவடிக்கை, ரவுடிகளுக்கு ஏதுவாக அமைந்ததாக கூறப்படுகிறது.
– இந்திரஜித்