ச்சேச்சே … அவள் so called தமிழ்சினிமா ஹீரோயின் – அப்டியெல்லாம் செய்யமாட்டா !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

“குழந்தை பிறக்குறவரைக்கும் வேறு எந்த ஆணோடும் தொடர்பு வச்சுக்கக் கூடாது. அதுக்கப்புறம் நீ எங்க வேணும்னாலும் போய்க்க”

கூடுதல் பணம் காரணமாய் ஒத்துக்கொண்டு அவளும் கர்ப்பம் தரிக்கிறாள்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

சிவசங்கரி எழுதிய ‘ஒரு சிங்கம் முயலாகிறது’ கதையைத் தழுவி 1980ல் எடுக்கப்பட்ட “அவன் அவள் அது” திரைப்படம் இதற்கு முன்பு வாடகைத்தாய் பற்றிப் பேசியிருக்கிறது.

சிவகுமார்-லட்சுமி தம்பதிக்குக் குழந்தையில்லையென, விபச்சாரம் செய்து பிழைத்துவரும் ஸ்ரீப்ரியாவை வாடகைத் தாயாக பேரம் பேசி கூட்டிவருவாள் லட்சுமி.

ஒரு கட்டத்தில், சிவகுமாரும் ஸ்ரீப்ரியாவும் தற்செயலாய் சந்தித்துவிட, குழந்தை காரணமாய் இருவருக்கும் உறவு ஏற்பட்டு லட்சுமிக்குத் தெரிந்துவிடுவதாகக் கதை போகும்.

Maddy – தம்மு தண்ணினு மாடர்னா இருந்தாலும் கற்பு ரீதியா பார்த்தா அவ ஒழுக்கமானவ தான்.

“படிப்புக்குப் பணம் தேவைப்பட்டுச்சு, அவங்க அந்தப் பணத்தைத் தர்றேன்னு சொன்னதால கர்ப்பமாகுறதுக்கு ஒத்துகிட்டேன்”

அதாவது..

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஹீரோ யார்கூட வேணும்னாலும் உறவு வச்சுக்கலாம். ஆனா ஹீரோயின் பரிசுத்தமானவளா இருக்கணும். அப்டியே அவள் வாடகைத்தாயா இருந்தாலும் படிப்புக்காக முதன்முதலா அதைப் பண்ற தியாகச்சுடரா இருக்கணும்.

வ்வாரே வ்வா!!

ரிதம் படத்துல முதல் ராத்திரிக்கு முன்னமே கணவன் இறந்துவிட, கண்ணகியாகவே காலத்தைக் கடத்தும் மீனா.

“என்னைய காணா பொணமாக்கிடு டா” என்று பருத்திவீரனில் சத்தியம் வாங்கும் பிரியாமணி.

அந்த வரிசையில் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் மமிதா.

‘அவன் அவள் அது’ – ‘விஸ் & ச’ இரு படங்களுமே, யாரென அறிமுகமில்லாத மனிதர்களுக்கு இடையிலான உள்ளுணர்வு பற்றிப் பேசியிருக்கிறது. ஆனால் வேறு வேறு குணாதிசியங்களுடன்.

சூர்யாவின் சூட்கேஸில் இருந்ததுபோல் மமிதாவின் கைப்பையிலும் சில ஆணுறைகள் ஏன் இல்லையென யோசனை எழுகிறது.

“ச்சேச்சே! அவள் so called தமிழ்சினிமா ஹீரோயின். அப்டியெல்லாம் செய்யமாட்டா!”

—   இந்திரா ராஜமாணிக்கம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.