ஸ்ரீரங்கத்தின் மீது தன் பார்வையை திருப்புவாரா ? திருச்சி மாநகர காவல்துறையின் ஆணையர் !
ஸ்ரீரங்கத்தின் மீது தன் பார்வையை திருப்புவாரா ?
திருச்சி மாநகர காவல்துறையின் ஆணையர் !
108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோவைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கத்திற்க்கு நாள்தோறும் ஆயிரக்கனக்கான பக்தர்கள் பெருமாளை தரிக்க வந்து செல்கின்றனர், அவர்கள் பெரும்பாலும் ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இராஜகோபுரம், தெற்கு வாசல் வழியாக கோயிலுக்கு செல்கின்றனர்.
தற்போது அந்த பாதைகள் முழுதும் நடைபாதை வியாபாரிகள் , தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் ஆட்டோகளால் மிகுந்த நெரிசல் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர்,
இராஜகோபுரம் உள்ளேயும் இருபுறமும் தள்ளுவண்டிகள் , தரைக்கடைகளால் நடந்து செல்பவர் மிகுந்த சிரமப் படுகின்றனர். காந்தி சிலை மற்றும் காவல் நிலையம் மிக அருகே உள்ள ஒரு காப்பி கடைக்கு வருபவர்கள் தங்கள் இரண்டு மற்றும் நான்கு சக்ரவாகனத்தை சாலையில் நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது, காவல் நிலையத்துக்கு காப்பி செல்வதால் காவல்துறை கண்டுக்காது என்று ஆதங்கத்துடன் சொல்கின்றனர்.
பொதுமக்கள், ஆனால் அவர்கள் புதிதாக மாநகர காவல்துறை ஆணையராக லோகநாதன் கண்டிப்பாக இந்த பிரச்சனைக்கு நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறார்கள் காரணம் அவரின் சமீபத்திய அதிரடி நடவடிக்கையே, காவல்துறை ஆணையர் ஸ்ரீரங்கத்தின் மீது தன் பார்வையை திருப்பு வேண்டும் ஶ்ரீரங்கவாசிகளின் கோரிக்கையாக உள்ளது.
-பாரிவேட்டை