அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு திடீர் நெஞ்சுவலி – மருத்துமனையில் அனுமதி !
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
சேலத்திலிருந்து சென்னை நோக்கி காரில் பயணித்த அமைச்சரின் வாகனம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் என்ற பகுதியை கடந்த பொழுது, செல் போனில் பேசிக்கொண்டு இருந்த போது முகம் எல்லாம் வியர்த்து நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது.
உடனடியாக, அப்பகுதியை சேர்ந்த மருத்துவர் அருண் என்பவருக்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதற்கட்ட பரிசோதனையில் அமைச்சருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதை அடுத்து அவர் உடனடியாக பெங்களுரில் உள்ள நாராயணா இருதாலையா என்கிற மருத்துமனைக்கு அவசர சிகிச்சைக்கா பரிந்துரை செய்து இருக்கிறார். அங்கிருந்து அவர் பெங்களூர் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கிறார்.
விசயம் கேள்விப்பட்ட அமைச்சர் சிவசங்கர் மருத்துமனைக்கு விரைந்து சென்று கொண்டிருக்கிறார்..
தமிழகத்தில், நாங்குநேரி சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு தலைவலியை உண்டாக்கியிருக்கும் வேளையில், அவருக்கு ஏற்பட்டிருக்கும் நெஞ்சுவலி தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.