சன் நெக்ஸ்டில் அருள்நிதியின் ‘ராம்போ’
இதுவரை கிராமத்துக் களத்தில் வீடுகட்டி விளையாண்ட டைரக்டர் முத்தையா முதன்முறையாக நகரத்தின் பின்னணியில் அருள்நிதியை ஹீரோவாக்கி ‘ராம்போ’ என்ற படத்தை டைரக்ட் பண்ணியுள்ளார். தான்யா ரவிச்சந்திரன், ‘பிக்பாஸ்’ ஆயிஷா, ஹரிஷ் பெராடி, விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் வில்லனாக மலையாள நடிகர் ரஞ்சித் சஜீவ் நடித்துள்ளார்.
அக்டோபர் 10-ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘ராம்போ’வின் ஒளிப்பதிவு : ஆர்.டி.ராஜசேகர், இசை : ஜிப்ரான், பி.ஆர்.ஓ: சதீஷ் [ எய்ம் ].
“குத்துச்சண்டை வீரனாக நடிக்கும் அருள்நிதிக்கும் தான்யா ரவிச்சந்திரனுக்கும் இடையே காதல் மலர்ந்த பிறகு நடக்கும் அதிரடி சம்பவங்கள் தான் இப்படம். அருள்நிதியுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். ரசிகர்களுக்கும் இந்த ‘ராம்போ’ நல்ல எண்டெர்டெய்ன்மெண்டாக இருக்கும். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்” என்கிறார் முத்தையா.
‘புலிக்குத்தி பாண்டி’ படத்திற்குப் பிறகு சன் நெக்ஸ்டில் ரிலீசாகிறது முத்தையாவின் ‘ராம்போ’.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.