அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

”சூப்பர் ஸ்டாரின் ‘தர்மன்’ மூலம் எனது திரைப் பயணம் முழுமை பெற்றுள்ளது” – சிம்ரன் பெருமிதம்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

30 ஆண்டுகளாக கதாநாயகியாக பல வெற்றிகளை பார்த்திருந்தாலும் கூட, காலத்திற்கேற்ப தன்னை புதுப்பித்து சவாலான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை இன்றும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் சிம்ரன்.ஒவ்வொரு படத்திலும் தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களை வியக்க வைக்கிறார். தனது திரைப்பயணத்தின் மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இது குறித்து நடிகை சிம்ரன்  “சில கனவுகள் நனவாக சரியான நேரம் அமைய வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று. அது ‘பேட்ட’ படத்தில் நிறைவேறியது. அதில் என்னுடைய கேரக்டர் சிறியதாக இருந்தாலும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. ஆனால், இன்று ‘தர்மன்’ படத்தில் முக்கியத்துவமும் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தில் அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய ரஜினிகாந்த் சார், கமல்ஹாசன் சார், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

என் திரைப்பயணம் முழுவதும் எனக்கு மாறாத அன்பையும் ஆதரவையும் வழங்கி வரும் என் ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது ஊக்கம்தான் ஒவ்வொரு புதிய அத்தியாயத்தையும் உற்சாகத்துடன் தொடங்க எனக்கு உதவுகிறது. நன்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த மனதுடன் இந்த அழகான புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறேன்” என்கிறார்.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.