அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘டார்க்’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தயாரிப்பு: ஏபிவி.மாறன் & கணேஷ் கே.பாபு. டைரக்டர்: கல்யாண் கே.ஜெகன், கதை: கணேஷ் கே.பாபு, ஆர்டிஸ்ட்: அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ருன், கே.பாக்யராஜ், நட்டி, இந்துமதி மணிகண்டன், விடிவி கணேஷ், சிபிசக்கரவர்த்தி, ஒளிப்பதிவு: ரவிசக்தி, இசை: மனு ரமேசன், எடிட்டிங்: கதிரேஷ் அழகேசன், தமிழ்நாடு ரிலீஸ்: ஃபைவ் ஸ்டார் செந்தில், பிஆர்ஓ: நிகில் முருகன்

கே.பாக்யராஜின் வீட்டு மேல் போர்ஷனில் மூன்று இளைஞர்கள் வாடகைக்கு குடி இருக்கிறார்கள். ஒரு நாள் அந்த மூன்று பேரில் ஒருவன் மற்ற இருவரை கொலை செய்துவிட்டு தானும் தீ வைத்து தற்கொலை செய்து கொள்கிறான். அந்த வீட்டுக்குத் தான் குடி வருகிறார் அஜய் கார்த்தி. அவர் வந்த பிறகு இரவில் மட்டும் பேய் பயமுறுத்துகிறது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

ஒரு புத்தகமும் ஒரு தோசைக்கல்லும் திடீரென கீழே விழுந்து பீதி கிளப்புகிறது. டி.வி.யில் “அப்படி போடு…போடு…” பாட்டு மட்டும் திடீர் திடீரென ஓடுகிறது. இதெல்லாமே செத்துப் போன அந்த மூணு பேர் பண்ற வேலை தான்னு நமக்கு தெரியுது. அந்த மூணு பேரும் ஏன் செத்தான்? எப்படி செத்தான்? இதற்கு விடை சொல்லும் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘டார்க்’.

அஜய் கார்த்தி நடித்த “டார்க்” படத்தின் முன்னோட்டம் வெளியானது | Uthayan Newsகே.பாக்யராஜும், அஜய் கார்த்தியும் செத்துக்கிடப்பதாக வந்த தகவலையடுத்து அந்த வீட்டுக்கு வருகிறார் ஏ.சி. நட்டி. அவர் வீட்டை நோட்டம் போடும் போது திடீரென எழுந்து நட்டியை எச்சரித்துள்ளதுவிட்டு மீண்டும் விழுகிறார் அஜய் கார்த்தி. அந்த ஒரு சீன் தான் நமக்கு லைட்டா ஜெர்க் ஆச்சு.

யாவரும் கேளீர்

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

110 நிமிடம் தான் படம். அதனால் என்ன நடக்குதுன்னு நமக்கு விளங்குவதற்குள் இடைவேளை வந்துருச்சு. அதுக்கப்புறம் பாக்யராஜ் மகள் அஞ்சனா நேத்ரு ஒரு கதை சொல்கிறார். அவர் உயிருடன் இருக்காரா? இல்லையாங்கிறதை படம் முடிஞ்ச பிறகும் நம்மால் கன்பார்ம் பண்ண முடியல. அதே மாதிரி அஜய் கார்த்தியின் அம்மா இந்துமதி அந்த வீட்டுக்கு வந்தாரா? இல்லையாங்கிறதையும் நம்மால் கன்பார்ம் பண்ண முடியல…… முடியல…..

ஒரு வருட தாடியுடனும் முடியுடனும் அஜய் கார்த்தி ஏன் இப்படி இருக்காருங்கிறதும் நமக்கு புரியலை. திகில் படம், பேய்ப்படம், டார்க்னு டைட்டில் வேற வச்சாச்சு. அதனால் இந்த கெட்டப் தான் செட்டாகும்ணு டைரக்டர் சொல்லிருப்பாரோ என்னவோ? மியூசிக் டைரக்டர் மனு ரமேசன் தான் இந்த ‘டார்க்’ஐ கொஞ்சம் என்ஜாய் பண்ண வைக்கிறார். மத்தபடி இந்த ‘டார்க்’-ல் எந்த ஸ்பெஷல் ஐடியாவும் இல்லை.

அங்குசம் பார்வையில் ‘டார்க்’ 39/100

— ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.